கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலச் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு எந்த கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக முக்கியமான சர்வே வெளியாகியுள்ளது. அதில் சில ஆச்சரியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அங்கு பாஜகவின் என்டிஏ கணிசமான வளர்ந்துள்ளது சர்வேயில் தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளா தேர்தல் தொடர்பாக புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு
VoteVibe நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது. அதில் அங்கு இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே கடுமையான மோதல் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெறும் சில தொகுதிகள் தான் அங்கு ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
கடும் போட்டி
வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என இரு கூட்டணிகளும் ஏறக்குறைய சமமான வாக்கு சதவீதத்தைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடையே 36.6% ஆதரவு இருக்கும் சூழலில், இடதுசாரி கூட்டணிக்கு 36.5% ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணியின் வளர்ச்சியும் கூட அங்குக் கணிசமாக உள்ளது. அங்கு என்டிஏ கூட்டணி சுமார் 14.9% வாக்கு சதவீதத்துடன் தனது வாக்கு வங்கியைக் கணிசமாக உயர்த்தியுள்ளது.
கால் பதிக்கும் பாஜக
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் இடதுசாரி கூட்டணி 68 முதல் 73 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 64 முதல் 70 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணிக்கு அதிகபட்சமே இரு இடங்கள் கிடைக்க மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் வரை பாஜக கேரளாவில் ஒரு இடத்திலும் வெல்லாத நிலையில், இந்த முறை 2 இடங்களில் வென்று கால்பதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
யார் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கும் கடும் போட்டி இருக்கிறது. தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வி.டி. சதீசன் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே சுமார் 29% வாக்காளர்களின் ஆதரவுடன் உள்ளனர். இது தவிர பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் 10.8% ஆதரவுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இடதுசாரிகளின் கே.கே. ஷைலஜா 9.3% ஆதரவைப் பெறும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் 8.4% ஆதரவுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி சரித்திர சாதனை படைத்தது. அந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி, மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அங்கு ஆட்சியைத் தக்கவைத்த முதல் கூட்டணி என்ற பெருமையையும் பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
கேரளாவைப் பொறுத்த வரை இந்த முறையும் அங்கு வழக்கம் போல ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கும் சூழலில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநில தேர்தல்களோடு மே 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்











Click it and Unblock the Notifications