வந்தாச்சு "செக்யூலர் மேட்ரிமோனி.." மதம் கடந்த திருமணம்.. இனிமே இப்படித்தான் மக்களே!
திருவனந்தபுரம்; திருமணம் என்பது தற்போது 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பெரும் கனவாக மாறியுள்ள நிலையில், சாதி மற்றும் மதம் இந்த திருமண வரன்களுக்கு பெரும் இடையூறாக வந்து நிற்கிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற திருமணத்திற்காக தொடங்கப்பட்ட 'செக்யூலர் மேட்ரிமோனி' கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காதல் திருமணம் தவிர்த்து வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை காலங்காலமாக இருந்து வரும் நிலையில் இதனை விரிவாக்க மேட்ரிமோனி எனும் திருமண தகவல் மையங்கள் தற்போது பெரும் அளவில் முளைக்கத் தொடங்கின.
சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் இந்த மேட்ரிமோனிகள் செயல்படத்தொடங்கியுள்ள நிலையில் இது திருமண தகவல் மையத்துறையில் பெரும் அளவில் ஆக்கிரமித்தது. ஆனால் கேரளாவில் புதிய வகையில் மேட்ரிமோனி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தொடக்கம்
கடந்த 2014ல் மனு மனுஷ்யஜாதி என்பவரால் பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட இந்த 'செக்யூலர் மேட்ரிமோனி' திருமண தகவல் மையம் கொரோனா காலத்தில் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. லாப நோக்கமற்று இயங்கி வருவதால் பலரும் இது பயனுள்ளதாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளதாக மனு கூறியுள்ளார். தற்போது இந்த பேஸ்புக் பேஜ்-ன் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும், அதிகமானோர் தொடர்ந்து தங்கள் சுயவிவரங்களை இதில் பதிவிட்டு வருவதாகவும் மனு கூறியுள்ளார்.

முரண்பாடுகள்
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, "கடந்த 2014ல் நான் பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை தொடங்கினேன். அதில், ஆணாதிக்கம், சாதி மற்றும் மத முரண்பாடுகளை உடைத்து, எதிர்த்து போராடிய தம்பதிகள் மற்றும் தனிநபர்களின் உத்வேகமான கதைகளைப் பகிர்ந்து வந்தேன். இதற்கு பல்வேறு தரப்பு பயன்பாட்டாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்கள் வந்தன. பின்னர் சிலர் அவர்களது சுயவிவர குறிப்பையும் பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து நான் திருமண தகவல் மையத்தை தொடங்கினேன்.

கொரோனா தொற்று காலம்
ஆனாலும் இதற்கு எதிர்மறையான கருத்துகள் வராமல் இல்லை. சிலர் என்னை பேஸ்புக்கில் தாக்கி தொடர்ந்து விமர்சித்து எழுதினர். அதற்கெல்லாம் நான் மனம் தளரவில்லை. அந்த நேரத்தில் நான் மாணவனாக இருந்தேன். எனவே படிப்பு மீதும் ஒரு பக்கம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனையடுத்து சில காலம் நான் இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ளவில்லை. பின்னர் கோரோனா தொற்று காலம் வந்தது. அப்போது இந்த பேஸ்புக் பேஜ்-ஐ பலர் பின்தொடர தொடங்கினர்."

ஒரே சிந்தனை
"நான் மீண்டும் இந்த பக்கதை புதுப்பித்து புதிய சுயவிவரங்களை பதிவிட தொடங்கினேன். பின்னர் எதிர்பார்க்காத அளவு சுயவிவரங்கள் எங்களுக்கு வரத்தொடங்கியது. பலர் திருமண அழுத்தம் குறித்து விரிவாக பகிர்ந்து வரன் தேடி சுயவிவரத்தை அனுப்பினர். ஒத்த சிந்தனையோட்டம் கொண்ட ஆட்களை பலர் தேட தொடங்கியுள்ளனர். குறிப்பாக இவ்வாறு தேடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் குறைந்தது ஒவ்வொரு மாதமும் 10 பெண்களின் சுயவிவர குறிப்பை பெறுகிறேன்" என மனு கூறியுள்ளார்.

புதிய திட்டம்
மேலும்,"சில காலங்களுக்கு முன்னர் வரை பலரும் தயக்கத்துடனேயே தங்கள் விவரங்களை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. ஆண்களும், பெண்களும் விரிவாகவே தங்கள் விவரங்களை பதிவிட்டுள்ளனர். பெற்றோர்களும் பலர் தங்கள் மகன்/மகளுக்கு வரன்களை தேட இந்த பக்கத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த 'செக்யூலர் மேட்ரிமோனி' மூலம் தற்போது வரை 30க்கும் அதிகமான மதச்சார்பற்ற திருமணங்கள் நடந்துள்ளன. இதற்கு அடுத்தகட்டமாக பாலின பாகுபாட்டவர்களுக்கான மற்றுமொரு இணையதளத்தை தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன்" என மனு கூறியுள்ளார்.
சாதியும், மதமும் நிறைந்துள்ள இந்த திருமண உறவுகளில் இந்த இணையதளம் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications