மது அருந்தியதை காரணமாக கூறி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கியவர் மது அருந்தியிருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
கொச்சியை சேர்ந்த கேரள குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், கடந்த 2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி அங்குள்ள நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தவறான திசையில் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். அவர் நேஷனல் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 7 லட்சத்துக்கு காப்பீடு வைத்திருந்தார். இந்த விபத்தை தொடர்ந்து, அவரது மனைவி தனது கணவரின் காப்பீடு பணத்தை வழங்கக் கோரி அந்த நிறுவனத்தை அணுகினார்.

மது அருந்தியதால் பணம் தர மறுப்பு
ஆனால், அந்த காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள், காப்பீட்டு பணத்தை வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்த நபர், மது அருந்தியிருப்பதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், காப்பீடு பணத்தை கோர முடியாது என அவரது மனைவியிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, தனக்கு தனது கணவரின் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி அந்தப் பெண் தீர்ப்பாயத்தை அணுகினார்.

காப்பீட்டு பணம் தர உத்தரவு
இதனை விசாரித்த தீர்ப்பாயம், "உயிரிழந்த நபர் சரியான பாதையில் தான் சென்றிருக்கிறார். ஆனால் எதிரே வந்த லாரி தான், தவறான திசையில் வந்ததோடு மட்டுமல்லாமல் கார் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்துள்ளது. அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே எந்த தவறும் செய்யாத நபருக்கு காப்பீடு தொகையை வழங்க முடியாது எனக் கூறுவது நியாயமல்ல. அதனால் காப்பீடு தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

மது அருந்தினால் காப்பீட்டுத் தொகை கிடையாதா?
இந்த உத்தரவுக்கு எதிராக நேஷனல் காப்பீட்டு நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ஷாஜி பி. சாலி இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர் மது அருந்தி இருந்தார் என்ற ஒற்றை காரணத்துக்காக அவரது காப்பீட்டுத் தொகையை யாரும் கோர முடியாது என காப்பீட்டு நிறுவனங்கள் சொல்லக் கூடாது.

உடனே வழங்க உத்தரவு
இந்த வழக்கில், உயிரிழந்த நபர் விபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர் போக்குவரத்து விதிகளின்படி சரியான பாதையில்தான் சென்றுள்ளார். அப்படி இருக்கும் போது, அவரது காப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தாருக்கு வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? மது அருந்துவதற்கும், மது அருந்தி தன்னிலை மறப்பதற்கும் நிறைய வித்திாயசங்கள் இருக்கின்றன. இந்த வழக்கை பொறுத்தவரை, உயிரிழந்த நபர் மது அருந்தியதால் சுய கட்டுப்பாட்டை இழந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே அந்த நபரின் காப்பீட்டுத் தொகையான ரூ.7 லட்சத்தை அவரது மனைவிக்கு உடனே வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications