திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சயன கோலத்தில் திருமால்.. கணக்கிட முடியாத பொக்கிஷங்கள்.. பத்மநாப சுவாமி கோவில் வரலாறு என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நீண்ட காலத்திற்கு பிறகு தலைப்பு செய்திகளில் உலா வரும் பத்மநாபசுவாமி திருக்கோயில் எப்போது கட்டப்பட்டது, யார் நிர்வகித்து வந்தார்கள் என்பதை பார்ப்போம்.

Recommended Video

    The Padmanabhaswamy Temple | The Mystery Behind World Richest Temple In Tamil

    உலகிலேயே மிகவும் பணக்கார கோயில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கும் பொக்கிஷங்களால் இதன் புகழ் உலகளாவி காணப்படுகிறது.

    இப்படிப்பட்ட இந்த கோயிலின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த கோயிலை யார் ஆட்சி செய்தது என்பது குறித்து பார்ப்போம்.

    கல்வான் மோதலில் கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி என்ன? அமெரிக்க ஊடகங்கள் திடுக் தகவல் கல்வான் மோதலில் கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி என்ன? அமெரிக்க ஊடகங்கள் திடுக் தகவல்

    18 நூற்றாண்டு

    18 நூற்றாண்டு

    இந்த கோயில் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் தற்போதைய அமைப்பானது 18ஆவது நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜா மார்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டதாகும். இந்த கோயில் சேர மன்னர்களின் கட்டடக் கலையின்படி கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் விஷ்ணு கடவுளாவார்.

    மன்னர் குடும்பம்

    மன்னர் குடும்பம்

    ஆதிசேஷன் எனப்படும் பாம்புகளின் அரசன் மீது தலை வைத்து படுத்த கோலத்தில் அதாவது அனந்தசயன கோலத்தில் விஷ்ணு காட்சியளிப்பார். இந்தியாவில் 108 வைஷ்ணவ ஆலயங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் 1991-ஆம் ஆண்டு வரை அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி ஆட்சியாளர் சித்திரா திருநாள் பலராமா வர்மா இறப்பு வரை கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகித்தது.

    கேரள ஹைகோர்ட்

    கேரள ஹைகோர்ட்

    1991-ஆம் ஆண்டுக்கு பிறகும் கோயிலை நிர்வகிக்க கடைசி ஆட்சியாளர் பலராம வர்மாவின் இளைய சகோதரர் உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மாவுக்கு கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ராஜ குடும்பத்திற்கு வழங்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    சிதம்பர ரகசியம்

    சிதம்பர ரகசியம்

    சிதம்பர நடராஜர் கோயிலுக்கு எப்படி சிதம்பர ரகசியமோ அது போல் பத்மநாபசுவாமி கோயிலுக்கு விலைமதிப்பில்லாத, எண்ணில் அடங்காத அதன் பொக்கிஷங்களும் புதையல்களும்தான் அந்த கோயில் செல்வாக்கடைய காரணமாயிற்று. கோயிலில் உள்ள தெய்வம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளை குறிக்கிறது.

    தோரணை

    தோரணை

    சன்னியாசியான வில்வமங்கலத்து சுவாமியார் பத்மநாபரைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்தார் என்கிறது புராணக் கதை. திருவனந்தபுரத்தில் இந்த கோயிலில் உள்ள அனந்த பத்மநாபன் விக்கிரகம் 18 அடி நீளம் உடையதாகும்.

    English summary
    When was Padmanabha Swamy , world's richest temple built? Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X