For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் வராஹி வழிபாடு!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை (13/07/208) வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருமயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம் மற்றும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கியமாக தஞ்சை பெரிய கோயில் போன்ற வராகி அம்மன் குடியிருக்கும் ஸ்தலங்களில் இன்றே ஆஷாட நவராத்திரி பூஜைகள் இன்றே ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது,

varahi alias vardhali is the goddes of agriculture and commander of divine mother lalitha

சாக்தமும் நவராத்திரிகளும்:

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

varahi alias vardhali is the goddes of agriculture and commander of divine mother lalitha

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆஷாட நவராத்திரி (13.07.2018- 21.07.2018)

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.

varahi alias vardhali is the goddes of agriculture and commander of divine mother lalitha

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் இன்று முதல் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்க்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க்கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

varahi alias vardhali is the goddes of agriculture and commander of divine mother lalitha

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது. வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம். வார்த்தாளி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள். ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

varahi alias vardhali is the goddes of agriculture and commander of divine mother lalitha

சக்தி வழிபாடு என்பது நம் நாட்டிற்குறிய சிறப்பு என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஆஷாட மாதத்தில் என்பதும், சுதந்திர தின ஜாதகத்தில் விவசாயத்தை குறிக்கும் சுக்கிரனின் ரிஷப லக்னமாகி, நீர் ராசியான கடகத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சந்திரன், சுக்கிரன், சனி இவர்களோடு பசுமைகாரகன் புதனும் இனைந்து ஆத்மகாரகன் சூரியனோடு சேர்ந்து நின்றதால் இந்தியர்களின் ஜீவனம் விவசாயத்தை ஒட்டியே இருக்கிறது. எனவே இந்த வராஹி நவராத்திரியில் வார்த்தாளியை வணங்கி கார்பரேட் வொயிட் காலர் ஜாபை விட்டுவிட்டு பொன்னேரு பூட்டி விவசாயத்தை வளர்க்க உறுதிபூணுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

English summary
Ashada Navaratri signifies the nine power nights of the Goddess during the Vedic lunar month of Ashada (June-July). It is the ideal time to invoke the supreme goddess Lalita Tripura Sundari for multifold desire fulfillment and prosperity blessings. These nine nights are known as Varahi Navaratri and very auspicious to worship Lalita’s commander of the chariot, Goddess Varahi. Propitiating Varahi can help deliver your earnest prayers to Mother Goddess Lalita so she can fulfill your desires and bless you with a prosperous life
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X