10 பொருத்தம் இருந்தாலும்.. திருமணத்திற்கு இன்னொரு விஷயமும் அவசியம்.. ஜோதிடம் சொல்வது என்ன?
திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு ஜாதகப்பொருத்தமும் பார்க்க வேண்டும்.
சென்னை: இருமனம் இணைவது திருமணம். காதல் திருமணம் என்றால் இரு மனங்கள் மட்டும் இணைவது போதுமானது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு ஜாதகப்பொருத்தமும் பார்க்க வேண்டும். என்னென்ன பொருத்தங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்று பார்க்கலாம்.
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் பத்து பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தினை இணைக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருந்தாலும் ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
பத்துப்பொருத்தங்களில் தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவைகளில் முக்கியமான பொருத்தங்கள் சரியாக அமையவேண்டும். மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. அந்த பொருத்தங்கள் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது.

திருமணப்பொருத்தம்
தம்பதியர் இருவருமே ஆரோக்கியத்துடன வாழ தினப்பொருத்தம் அவசியம். அதே போல குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக,போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும்.

தாம்பத்ய வாழ்க்கை
தம்பதிகளிடையே உறவு கணவன் மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு,அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

இது ரொம்ப முக்கியம்
மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது. கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம் முக்கியமானது. ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது.

ரஜ்ஜுப்பொருத்தம்
ரஜ்ஜுப்பொருத்தம் கணவன் மனைவி நீண்ட காலம் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் பாக்கியத்தை தரக்கூடியது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் தலை முதல் பாதம் வரை நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒரே ரஜ்ஜுவில் வரக்கூடாது. அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும்.

குழந்தைப்பேறு
திருமணம் முடிந்து குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவது மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. புத்திரபாக்கியத்திற்கு இந்த பொருத்தம் அவசியம். சிலருக்கு பத்து பொருத்தம் இருக்கிறது என்று பார்த்து திருமணம் முடித்து வைத்தால் சிலரது வாழ்க்கை பிரிவில் முடிகிறது. பத்து பொருத்தம் பார்ப்பதோடு ஆண் பெண் ஜாதகத்தில் என்னென்ன சரியாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

குடும்பம் குழந்தைகள்
குடும்ப ஸ்தானம் எனப்படும் 2ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் வலிமையாக இருக்க வேண்டும். தம்பதியர் ஒற்றுமை, குடும்பம் சந்தோசமாக அமைய இவை முக்கியம். குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கை, பார்வையும் சுபமானதாக இருக்க வேண்டும். ஐந்தாம்பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சரியாக இருக்க வேண்டும். அடுத்த சந்ததியை நிர்ணயம் செய்யப்போவது அந்த பாவகம்தான்.

அந்தரங்க வாழ்க்கை
அதேபோல ஆறாம்பாவம் எனப்படும் நோய் கடன் ஸ்தானம், 8ஆம் பாவகம் எனப்படும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம், தம்பதியர் ஒற்றுமை திடீர் அதிர்ஷ்டம் பற்றி சொல்லும் இடங்கள். இதேபோல 12ஆம் பாவகம் வலிமை பெற வேண்டும். தம்பதியர் இடையே அந்தரங்க வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இத்தனை பார்த்து முடித்த திருமணங்கள் தோல்வியில் முடிந்தால் அது அவரவர்களின் முன்வினைப் பயன்தான்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications