சத்தீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை- மூத்த கமாண்டர் உட்பட 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர்- ஒடிஷா மாநிலங்களில் எல்லையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை அப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர்- ஒடிஷா எல்லையில் நுபாடா என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் அடர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையில் நேற்று இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை அடர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய கமாண்டர்
இந்த மோதலில் ஜெயராம் என்ற சலபதி என்ற மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ1 கோடி பரிசுத் தொகை அறிவித்திருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமித்ஷா பாராட்டு
மாவோயிஸ்டுகளை அழித்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நக்சலிசத்தை (மாவோயிஸ்டுகளை) இந்தியாவில் இருந்து வேரோடு அழிக்கும் நடவடிக்கையின் இறுதி நிலையில் இருக்கிறோம். நமது பாதுகாப்புப் படையினருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். மேலும் மாவோயிஸ்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நமது பாதுகாப்புப் படையினர் இணைந்து போராடுகின்றனர். நக்சலிசம் ஒழியக் காத்திருக்கிறது எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications