இளையராஜாவுக்கும் பவதாரிணிக்கும் என்ன பிரச்சனை? மனசாட்சி இல்லாமல்! கோபப்பட்ட கங்கை அமரன்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உடல்நிலை குறைவினால் காலமானார். இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் பவதாரணி குறித்து பேட்டி ஒன்றில் கோபமாக பேசியிருக்கிறார். அதாவது பவதாரணி மறைந்த பிறகு அவரைப் பற்றி சமூக வலைதளத்தில் சில தவறான செய்திகள் பரவி வருவதை குறித்து கங்கை அமரன் கோபப்பட்டு இருக்கிறார்.
ஒரு சிலர் இளையராஜாவிற்கும் பவதாரிணிக்கும் இடையே பிரச்சனை இருந்தது அதனால் பவதாரிணியின் கடைசி கட்டத்தில் இருவரும் பேசவில்லை என்று கூறி இருக்கிறார்கள் என கங்கை அமரன் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்தில் இலங்கையில் மருத்துவத்திற்காக போயிருந்த இடத்தில் வைத்து சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தாலும் அதிகமான பிரியம் பவதாரிணி மீதுதான் உண்டாம்.
பவதாரிணி குறித்து போஸ்ட் போட்ட யுவன்.. வீட்டுக்குள் ரகசியமாய் நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார்
ஆனாலும் அவர் இறந்த சமயத்தில் இளையராஜா குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்திருக்கிறது. இந்த நிலையில் அது குறித்து முதல் முறையாக கங்கை அமரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், சிலர் மனசாட்சி இல்லாமல் இணையத்தில் கண்டமேனிக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் தான் இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசுறாங்கன்னு தெரியல. எங்க வீட்டுல பவதாரிணியின் இழக்கு ரொம்பவே பெரிய இழப்பு.
பவதாரிணிக்கு மூன்றாவது கட்டத்தில் புற்றுநோய் இருப்பது எங்களுக்கு தெரிய வந்ததும் நாங்கள் எல்லோரும் எவ்வளவு வேதனையில் இருந்தோம் தெரியுமா? அதை நாங்கள் வெளியில் சொல்லவில்லை... ஏன் அவளுக்கே நாங்கள் அதை சொல்லவில்லை. கடைசி வாரத்தில் தான் நாங்கள் அவளிடம் சொன்னோம். அதற்கு முன்பு அவள் வீட்டில் இருக்கும்போது கூட எனக்கு போன் பண்ணி ஏன்பா என்ன பார்க்க வரலனு கேட்கும் போது நான் அவளிடம் எனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது.
அதனால இப்போ அங்க வந்தா சரியா இருக்காதுன்னு சொல்லி இருந்தேன். ஏன்னா அவளை பார்த்தால் அழுதுடுவேன். அதற்காகத்தான் அவளை பார்க்கல அவ எங்க குடும்பத்துக்கே ரொம்பவும் செல்ல பிள்ளை. அவ எங்களுக்கு எப்பவும் குழந்தைதான். அவளுக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் குழந்தையாக தான் இருந்தாள். அதிலும் அண்ணனுக்கு ரொம்பவும் செல்ல பிள்ளை பவதாரிணி தான். அண்ணன் வீட்டுக்கு வந்ததுமே அவகிட்ட ஏதாவது கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாரு.
பவதாரிணியை பார்த்து இது என்ன இப்படி டிரஸ் போட்டு இருக்கேன்னு கேட்பாரு. அவ அதுக்கு குழந்தையா ஏம்பா இது நல்லா இல்லையா என்று கேட்பா, அதற்கு ஏதாவது கிண்டல் செய்வாரு.. அப்படி ரொம்பவே ஜாலியாக இருந்தாங்க, ஆனால் வெளியே சிலர் பவதாரணிக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை அவங்க ரெண்டு பேரும் பேசலைன்னு வாய் கூசாம பேசிக்கிட்டு இருக்காங்க. எதுக்காக தான் இப்படி எல்லாம் சம்பந்தமே இல்லாம வதந்தி பரப்புறாங்கன்னு தெரியல என்று கோபமாக தன்னுடைய ஆதங்கத்தை கங்கை அமரன் கொட்டி இருக்கிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications