யுஏஇ- சிறப்பாய் நடந்த ''விரைவில் குணமடைய" நிகழ்ச்சி
இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் முகமாக மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்கும் "விரைவில் குணமடைய" நிகழ்ச்சி எமிரேட்சில் நடந்தது.
துபாய் அல் பராஹா மருத்துவமனை, ராஷித் மருத்துவமனை, மெட்கேர் மருத்துவமனை, ஷார்ஜா சுலைஹா மருத்துவமனை, குவைத்தி மருத்துவமனை, அபுதாபி அல் அஹலியா மருத்துவமனை, லைஃப் லைன் மருத்துவமனை,
ராஸ் அல் கைமா அல் ஸக்ர் மருத்துவமனை, அஜ்மான் ஷைக் கலீஃபா பின் ஸைத் மருத்துவமனை, அல் அய்ன் மாடர்ன் கிளீனிக், நியூ இந்தியன் மெடிக்கல், அல் வகர் கிளீனிக், புஜைராவில் புஜைரா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் EIFF அமைப்பின் பெண்கள் அணியினரும் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துக் கொண்டு துபை அல் பராஹா மருத்துவமனையிலும்,அஜ்மான் ஷேக் கலீஃபா பின் ஸைத் மருத்துவமனையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று ஆறுதல் கூறி பழங்கள் மற்றும் பூக்களை வழங்கினர்.