For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன நலத்தை பாதிக்கும் மரபணுவைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

By Staff
Google Oneindia Tamil News

Researchers identify Gene which causes Mental illness
எடின்பர்க்: மனச் சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பாதிப்புகள் ஏற்படக் காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச ஆய்வாளர்கள் குழுவினர் இதுதொடர்பான ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். மன நலம் குன்றிய 2000 பேர் மற்றும் மன நல ஆரோக்கியமான 2000 பேரை அவர்கள் தேர்வு செய்தார்கள்.

அவர்களின் மரபணுக்களை முழுமையாக ஒப்பிட்டு அலசி ஆராய்ந்தனர். மன நலம் குன்றிய நபர்களிடம் ABCA13 எனப்படும் மரபணு செயல்படாமல் இருப்பதும், மற்றவர்களுக்கு இதற்கு மாறாக அது நல்ல செயல்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது.

மூளைகளில் கொழுப்பு சத்து மூலக்கூறுகள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ அதே போன்ற தாக்கத்தை இந்த மரபணுக்கள் தருகின்றன. இதை கண்டுபிடித்திருப்பது, மன நல பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்புக்கும், சிகிச்சை முறைகளுக்கும் பெரும் பயன் அளிக்கும் என்று பல்கலைக்கழக பேராசிரியர் டக்லஸ் பிளாக்வுட் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X