For Daily Alerts
பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு ஊட்டி மலை ரயில் நேரம் மாற்றம்

குன்னூரில் இருந்து ஊட்டிக்குச் செல்லும் மலை ரயில் தினமும் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
பயணிகளின் பாதுகாப்பு, மழை காலம் ஆகியவற்றை முன்னிட்டு இன்று முதல் மலை ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மலை ரயில் குன்னூரில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.
இதே போன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வரும் ரயில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படுவது வழக்கம். இன்று முதல் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 3 மணிக்கு வந்து சேரும். குன்னூரில் இருந்து 3.15 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் வரும்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.