For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயிலாப்பூரில் தொட்டு விடாதீர்கள்... நூல் வெளியீட்டு விழா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மலேசியப் பத்திரிக்கையாளர் திருமதி. ஜெயகோகிலவாணியின் தொட்டு விடாதீர்கள்..! நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 5. 30 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் சிற்றரங்கில் நடக்கிறது.

பாரதியார் சங்கத் துணை தலைவர் டி.கே.எஸ். கலைவாணன் தமிழ் வாழ்த்துடன் விழா துவங்குகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. மதிவாணன் வரவேற்புரை வழங்குகிறார்.

பாரதியார் சங்கத் தலைவர் இரா. காந்தி தலைமை தாங்குகிறார். இந்த விழாவிற்கு மக்கள் ஓசை நாளிதழின் தலைமையாசிரியர் எம். இராஜன் முன்னிலை வகிக்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகின்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மருத்துவ மேஜர் டி. இராஜா நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

ஓய்வு பெற்ற தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையாளர் கலைமாமணி முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கருத்துரை வழங்குகிறார். நூலாசிரியர் திருமதி. ஜெயகோகிலவாணி ஏற்புரை வழங்குகிறார்.

பாரதியார் சங்க செயற்குழு உறுப்பினர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் நன்றியுரை வழங்குகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாரதியார் சங்கம் செய்துள்ளது.

English summary
Malaysia based journalist Jayakokilavani's book Thottu Vidatheergal will be released today at Chennai. Dr. Aravanan, former VC of MS university will release the book and give a speech. Raja, former VC of Dr. MGR medical university will get the first copy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X