For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூர் அமைச்சரிடம் 'சபாஷ்' வாங்கிய ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 4-8-2012 அன்று மாலை சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஹமீது கௌஸ் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவுத் துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கல்விப் பணிகளை பாராட்டி பேசியதுடன், கல்வி தான் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்றும், ஒன்றுப்பட்டு சமூகமாக திகழ்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Jmc Alumni Association

நீ சூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சுகதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலாளருமான இணை பேராசிரியர் டாக்டர் முஹம்மது பைசல் இப்ராஹிம், பென்கூலம் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முஹம்மது அப்துல் ஜலீல், துணை தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக், டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றும் சங்கம் இனி சிங்கப்பூர் சிறைக் கைதிகளுக்கு நல்லுபதேசம் வழங்கும் சேவையில் ஈடுபடவிருப்பதாக சங்கத்தின் தலைவர் முஹ்யத்தீன் அப்துல் காதர் தெரிவித்தார். மௌலவி கலீல் அஹ்மது ஹசனி ரமலானின் சிறப்பு பற்றி பேசினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு தலைவர் அப்துல் காதர் மற்றும் செயலாளர் அப்துல் சுபஹான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.

அமானுல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

English summary
Singapore law minister K. Shanmugam has appreicated JMC alumni association's Singapore branch for its service towards society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X