For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலைச் சொல்லும் சில பூக்களும்... புன்னகையும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது ஒருவகை. செயல்களின் மூலமும், சில பொருட்களை வாங்கிக் கொடுத்தும் அன்பை அழகாக வெளிப்படுத்தலாம்.

மனதிற்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்றோ, பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்தோ கூட மனைவியிடம் அன்பை வெளிப்படுத்தலாம்.

அருகாமையில் இருக்கும் போது கைகளை கோர்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருப்பது கூட அன்பின் வெளிப்பாடுதான். கோடை காலத்தில்தான் தம்பதிகளிடையே கோபமும், சண்டையும் அதிகம் வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே அவ்வப்போது சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களை செய்து மனைவியை அல்லது காதலியை ரொமான்ஸ் ஆக கூல் செய்யுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அவங்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு படியுங்களேன்.

மெல்லிய புன்னகை

மெல்லிய புன்னகை

காலையில் எழும் போதோ, அல்லது மனைவியை எழுப்பும் போதோ புன்னகையுடன் தொடங்குங்கள். அந்த நாள் முழுவதும் அற்புதமான நாளாக திகழும். வீட்டு வேலை மட்டுமல்ல ஆபிஸ் வேலையில் கூட டென்சன் வராதாம்.

காதல் சொல்லும் ரோஜா

காதல் சொல்லும் ரோஜா

காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜாக்களை அடையாளமாக கூறுகின்றனர். அலுவலகம் விட்டு வரும் போது ரோஜா உடன் வரும் கணவரைக் கண்டால் மனைவியின் முகத்தில் புன்னகை மத்தாப்பு ஒளிருமே!.

சுவையான சாக்லேட்

சுவையான சாக்லேட்

சிலருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும், சிலருக்கு சாக்லேட் பிடிக்கும். மனைவிக்கு பிடித்த சாக்லேட் வாங்கி வந்து சர்ப்ரைஸாசாக நீட்டினால் உங்களை அப்படியே கட்டிக்கொள்ள மாட்டாரா என்ன?

சந்தோச அடையாளங்கள்

சந்தோச அடையாளங்கள்

காதலை வெளிப்படுத்தும் அடையாளங்கள் எத்தனையோ இருக்கின்றன. மனம் கவரும் இயற்கை காட்சிகள் கூட காதலை வெளிப்படுத்தும் அடையாளங்கள்தான் அதை வாங்கி வந்து படுக்கை அறையில் மாட்டி வைக்கலாம்.

ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்

ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்

பரிசுகள், சர்ப்ரைசஸ்கள் கொடுப்பதற்கு நல்ல நாள், பிறந்தநாள் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான். உங்கள் மனைவி புறா வளர்க்க ஆசைப்படுகிறாரா? காதலை சொல்லும் வெண்புறா வாங்கிக் கொடுங்களேன்.

காதல் நினைவுச் சின்னம்

காதல் நினைவுச் சின்னம்

உங்கள் மனைவிக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது அழைத்துப் போங்கள். அது ஆக்ராவாக கூட இருக்கலாம். காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மகாலை கண் குளிர ரசித்து விட்டு வாருங்களேன்.

சின்னதாய் ஒரு முத்தம்

சின்னதாய் ஒரு முத்தம்

கொஞ்சம் கூட காசு செலவில்லாத அன்பை ஆழமாக வெளிப்படுத்தும் பரிசு முத்தம்தான் தினசரி காலை அலுவலகம் கிளம்பும் போதும், வீட்டிற்கு வந்தும் சின்னதாய் முத்தமிடுங்களேன். அப்புறம் என்ன அன்றைக்கு நலமாய் விடிந்ததைப்போல நாளும் சுகமாய் முடியும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

English summary
This is all about how to improve your marriage, and to be the man of her dreams. However, each one of you also must love his wife as he loves himself, and the wife must respect her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X