For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகப்பு லிச்சி பழம்...

Google Oneindia Tamil News

சென்னை: சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது லிச்சி பழம்.

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.

லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.

முட்டை வடிவ பழம்:

முட்டை வடிவ பழம்:

முட்டை வடிவத்தில் இருக்கும் இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது.

சத்துக்கள் ஆயிரம்:

சத்துக்கள் ஆயிரம்:

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம். புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் லிச்சி:

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் லிச்சி:

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயம் காக்கும் லிச்சி:

இதயம் காக்கும் லிச்சி:

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

உடலுக்கு உரம்:

உடலுக்கு உரம்:

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:-

நோய் எதிர்ப்பு சக்தி:-

லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.

ரத்த உருவாக்கம்:

ரத்த உருவாக்கம்:

மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது.தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

சிவப்பணு உருவாக்கம்:

சிவப்பணு உருவாக்கம்:

ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

English summary
Litchi fruit increases red blood cell counts and giving various health factors to human body strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X