For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

33. கொல்லாமை

By Staff
Google Oneindia Tamil News

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

(321)

விளக்கம்:

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே: கொல்லும் செயல் பிற தீவினைகள் எல்லாம் கொண்டு வரும்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

(322)

விளக்கம்:

உள்ள உணவையும் பலரோடு பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

(323)

விளக்கம்:

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்தவுயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்: அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.


நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

(324)

விளக்கம்:

நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால் எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்ல் என்பதை கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.


நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

(325)

விளக்கம்:

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.


கொல்லாமை மேற்கொண்டு ஓழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லாது உயிருணணும் கூற்று.

(326)

விளக்கம்:

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.


தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

(327)

விளக்கம்:

தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வாதானாலும்கூட, தான் மற்றொன்றினது இனிய. உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக்கூடாது.


நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

(328)

விளக்கம்:

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோர்க்குக் கொன்றுவரும் ஆக்கம் இழிவானதே யாகும்.


கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

(329)

விளக்கம்:

கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.


உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

(330)

விளக்கம்:

நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியரேயாவர்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X