அதிகார விளக்கம்: சோம்பலைத் தவிர்த்து தொடர்ந்து முயற்சி செய்வது செல்வம், புகழ் மற்றும் முன்னேற்றத்தைத் தரும். உழைப்பைத் தவிர்த்து சோம்பலுடன் வாழ்பவர்கள் தங்களிடம் உள்ள வாய்ப்புகளையும் வளங்களையும் இழக்கக்கூடும்.
| எண் | குறள் |
|---|---|
| 601 |
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
|
| 602 |
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் பொருள்: தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.
|
| 603 |
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து பொருள்: விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
|
| 604 |
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு பொருள்: சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
|
| 605 |
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் பொருள்: காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
|
| 606 |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது பொருள்: நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
|
| 607 |
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் பொருள்: சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.
|
| 608 |
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும் பொருள்: குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
|
| 609 |
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் பொருள்: ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
|
| 610 |
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு பொருள்: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
|