அதிகார விளக்கம்: திட்டமிட்டு தொடர்ந்து முயற்சி செய்து, தடைகள் வந்தாலும் மனம் தளராமல் செயல்களை நிறைவேற்றும் ஆற்றலே ஆள்வினை உடைமை. முயற்சி, பொறுமை மற்றும் செயல்திறன் வெற்றிக்கு அடிப்படையாகின்றன.
| எண் | குறள் |
|---|---|
| 611 |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் பொருள்: நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
|
| 612 |
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு பொருள்: ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
|
| 613 |
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள்: முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
|
| 614 |
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் பொருள்: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
|
| 615 |
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் பொருள்: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.
|
| 616 |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் பொருள்: முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
|
| 617 |
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் பொருள்: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
|
| 618 |
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி பொருள்: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
|
| 619 |
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பொருள்: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
|
| 620 |
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் பொருள்: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
|