அதிகார விளக்கம்: அறிவில்லாமல் செயல்படுதல், தவறான முடிவெடுத்தல், தேவையற்ற ஆசைகளுக்கு அடிமையாகுதல் மற்றும் தன்னைத்தானே பாதிக்கும் செயல்களைச் செய்வது பேதைமையின் அடையாளங்களாகும். அறிவுடன் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
| எண் | குறள் |
|---|---|
| 831 |
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் பொருள்: அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
|
| 832 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல் பொருள்: அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
|
| 833 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் பொருள்: தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.
|
| 834 |
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் பொருள்: படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.
|
| 835 |
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு பொருள்: அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
|
| 836 |
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் பொருள்: செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
|
| 837 |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை பொருள்: அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
|
| 838 |
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின் பொருள்: அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
|
| 839 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில் பொருள்: அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!
|
| 840 |
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் பொருள்: சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
|