அதிகார விளக்கம்: அறிவு, ஆற்றல் மற்றும் செல்வாக்கு கொண்ட பெரியோர்களை அவமதிக்காமல் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களின் மனதைப் புண்படுத்துவது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்; பணிவும் மரியாதையும் பாதுகாப்பான உறவுகளுக்கு அடிப்படையாகும்.
| எண் | குறள் |
|---|---|
| 891 |
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை பொருள்: எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
|
| 892 |
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும் பொருள்: பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
|
| 893 |
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு பொருள்: ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.
|
| 894 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல் பொருள்: அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
|
| 895 |
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் பொருள்: பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.
|
| 896 |
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் பொருள்: தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
|
| 897 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் பொருள்: குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?
|
| 898 |
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து பொருள்: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.
|
| 899 |
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் பொருள்: உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
|
| 900 |
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் பொருள்: மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.
|