அதிகார விளக்கம்: செல்வம், பதவி அல்லது அதிகாரத்தால் மட்டும் உண்மையான பெருமை கிடைக்காது. பணிவு, அறிவு, ஒழுக்கம், தன்னடக்கம் மற்றும் பிறருக்கு உதவும் நல்ல செயல்களே மனிதனின் உயர்வை நிர்ணயிக்கின்றன.
| எண் | குறள் |
|---|---|
| 971 |
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் பொருள்: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.
|
| 972 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் பொருள்: எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
|
| 973 |
மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் பொருள்: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
|
| 974 |
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு பொருள்: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
|
| 975 |
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல் பொருள்: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
|
| 976 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு பொருள்: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
|
| 977 |
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான் சீரல் லவர்கண் படின் பொருள்: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
|
| 978 |
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து பொருள்: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
|
| 979 |
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் பொருள்: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
|
| 980 |
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் பொருள்: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
|