Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்வந்திரி பீடத்தில் அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க 100008 வடை மாலை தயார்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ராம பக்தர் அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க 100008 வடைகளால் ஆன மாலை தயார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.ஞாயிற்றுக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழ மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

100008 வடைமாலை

100008 வடைமாலை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்திகொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28ஆம் தேதி தொடங்கியது.

3 நாட்களாக தயாரான வடை

3 நாட்களாக தயாரான வடை

இந்த வடைகளை தயாரிக்க 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அர்ச்சகர்கள் 12 அடுப்புகளில் 3 நாட்கள் வடை தயாரிப்பு பணியை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. ரமேஷ் தலைமையிலான குழுவினர் சாமிக்கு சாத்துவதற்காக வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பூ அலங்காரம்

பூ அலங்காரம்

சென்னையைச் சேர்ந்த பூ அலங்கார குழுவினர் கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களால் அலங்கரித்தனர். நாளை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணை, சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட வைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

3 ஆயிரம் பேர் முன்பதிவு

3 ஆயிரம் பேர் முன்பதிவு

ஆஞ்சநேயரை தரிசிக்க இதுவரை 3 ஆயிரம் பேர் இணைய வழியில் சாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இணைய வழியில் பதிவு செய்த 3000 பேர் ஒரு மணி நேரத்துக்கு 500 பேர் என அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+