Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன் 2023 : இந்த 2 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்..திடீர் ஜாக்பாட் கிடைக்குமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு பிறந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். ஜனவரி மாதத்தில் சூரியன், தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்வார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். இந்த ஆண்டு இறுதி வரைக்கும் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசியில் சனியும் சுக்கிரனும் மீன ராசியில் குருவும், மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்கின்றன. சுக்கிரன் மகர ராசியிலும் பின்னர் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

மேஷ ராசிக்காரர்களுக்கு புது வருடத்தின் முதல் மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், ராசியில் ராகு, ராசி நாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டில் சூரியன், பத்தாம் வீட்டில் சனி,சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சனி பகவான்

January matha Rasi palan 2023 tamil Prediction for Mesham and Rishabam

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் சனி பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்கள் ஏற்படும். வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். பதவி அதிகாரம் கிடைக்கும். பத்தாம் வீட்டில் சுக்கிரனும் சனியும் இணைந்து பயணம் செய்யப்போகின்றனர். சாதகமான அம்சம். நல்ல வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. திருமணம் குடும்ப வாழ்க்கை சாதகமாக உள்ளது. நிறைய பண வரவும் லாபமும் வரப்போகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் இருந்தே நீங்கள் பண மழையில் நனையப்போகிறீர்கள். சொத்து வாங்க செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். மனதிற்கு பிடித்த வரன் அமையப்போகிறது. ஜென்ம ராகு ஏழாம் வீட்டில் கேது என பயணம் செய்தாலும் உங்களுக்கு சாதகமான அம்சமே. இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலைகளை செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக வங்கிக் கடன்கள் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சின்னச் சின்ன டென்சன்கள் வந்து போகும் என்றாலும் எளிதில் சமாளிப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு சுப விரைய செலவுகள் வந்து போகும். சனி பகவான் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். குல தெய்வ கோவில் தரிசனம் நிறைய அற்புதங்களைத் தரப்போகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் பயணம் அற்புதமாக உள்ளது. சோதனைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். சனி பகவான் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். ராகு விரைய ஸ்தானத்திலும் கேது ஆறாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இந்த மாதம் உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த மாதம் முழுக்க சனியும் சுக்கிரனும் சாதகமாக உள்ளதால் உங்களுக்கு சாதகமாக உள்ளது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை தரப்போகிறது. திருமண சுப காரிய முயற்சிகள் வெற்றியைத் தரப்போகிறது. காதல் வாழ்க்கை கல்யாணத்தில் முடியும். குடும்ப வாழ்க்கை உற்சாகத்தை தரும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். நீங்கள் தொட்டது துலங்கப்போகிறது நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஜனவரி மாதத்தை உற்சாகமாக எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+