Meenam: மீனம் ராசிக்கு புரோமோஷன் கன்ஃபார்ம்.. வாழ்க்கையே மாறப்போகுது
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறந்துவுள்ளது. மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய விஷயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். ரத்த பந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் வாக்குவாதங்கள் எதுவும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தானம்
நிறைய விரயங்கள் ஏற்படும் என்பதால் சனிக்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழை மக்களுக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். எதிரிகள் திடீரென தலை தூக்குக் நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 43, 75 ஆவது பாடலை படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். பயங்கள் அனைத்தும் நீங்கும்.
உடற்பயிற்சி
தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதை, முதுகு, கால் பாதம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். லாபம் அதிகமாக ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். மறைந்தவன் மறைந்த இடத்தைப் பார்ப்பது யோக பலத்தைக் கொடுக்கும். சர்வ ஜெயத்தை ஏற்படுத்தும்.
வெற்றி மேல் வெற்றி
வழக்குகளில் வெற்றிகள் ஏற்படுத்தும். எதிர்த்தவர்களை எல்லாம் வெற்றி பெறக்கூடிய நல்ல காலகட்டம். அரசுத் துறை, அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். இழுத்துக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் இனி டக்கென்று நடக்கும்.
சிக்கல் தீரும்
எதிர்பார்க்காத நன்மைகள் எல்லாம் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்றம் அதிகமாகப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும். அந்நியோன்யக் குறைபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கவனம்
நீண்ட நாட்களாக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த ஆரோக்கியக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நிறைய சுப விரயங்கள் ஜென்ம சனியில் நடக்கும். எல்லா விஷயங்களிலுமே ஏற்றங்கள் ஏற்படும் அற்புதமான காலகட்டம், விஷ ஜந்துகள், வழுக்கலான இடங்கள் போன்றவற்றில் கவனம் தேவை. புரோமோஷன் கண்டிப்பாக கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications