Meenam: மீனம் ராசிக்கு மார்ச் மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. தொழிலில் அபுதமான முன்னேற்றம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது. 5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். ராசியில் சனி பகவான் இருக்கிறார். மீனம் என்பது குருவின் வீடு. விற்பனையில் ராஜாவாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் எந்த தொழிலில் இருந்தாலும் அதில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். மக்கள் தொடர்பில் இருக்கக்கூடிய நீங்கள் அரசியல்வாதி, தொழிலதிபர், களப் பணியாளராக என எப்படி இருந்தாலும் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.
முன்னேற்றம்
உலகப் புகழ் பெறக்கூடிய நேரமாக இருக்கும். பெரிய பிராண்டை ஆரம்பிப்பீர்கள். சனி ராசியில் அமர்ந்து 10 ஆம் இடத்தைப் பார்ப்பது நல்ல அமைப்பாகும். ஜாப் ஒர்க், மெஷின் ஷாப், புரொடக்ஷன் துறை, பொருளை வாங்கி விற்கும் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம், முன்னேற்றம் ஏற்படும். 3, 8 க்கு உடைய சுக்கிர பகவான் ராசியிலேயே உச்சம் பெறுவதால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆடம்பர வாழ்க்கை
உடலில் பல்வேறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சொல்ல முடியாத மறைமுகப் பிரச்சனைகள், தோல் பிரச்சனை, கண், முடி, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த மாதம் முழுவதும் ஆடம்பர வாழ்க்கை மீது உங்கள் எண்ணம் செல்லும். அதனால் வம்புகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அந்நியோன்யம்
12 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பழைய வழக்குகள், கேஸ்கள், முடிந்து போன பிரச்சனைகள் எல்லாம் மீண்டும் வரும். அந்தப் பிரச்சனைகளை முடித்து விடுவது நல்லது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இந்த மாதம் முழுவதும் பிரச்சனைகள் தந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தூக்கமின்மை ஏற்படும்.
நிம்மதி கெடும்
12 ஆம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய் என ஏராளமான கிரகங்கள் இருப்பதால் உங்கள் நிம்மதியைக் கெடுக்கும் சூழல் ஏற்படும். எதுவுமே நடக்கவில்லை என்றாலும் ஏதாவது உங்களுக்கு நடப்பது போன்ற எண்ணம் ஏற்படும். நடக்காத விஷயங்களை கற்பனை செய்து கொண்டு மனக் குழப்பமடையாமல் இருப்பது நன்மையைத் தரும்.
வழிபாடு
ஆளுமைத் தன்மை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். சூரிய பகவானை வழிபாடு செய்வது, கஞ்சனூர் செல்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துவது மேன்மையைத் தரும்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications