Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. பண வரவு அற்புதமாக இருக்கும்
Mesham Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். ஒருமாதிரியாக இருந்து வந்த பதட்டம் எல்லாம் படிப்படியாக குறையும். நல்ல செய்திகள் நடைபெறும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குட்நியூஸ்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். பெரியவர்கள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த வந்த பல பிரச்சனைகள் தீரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும்.
லாபம் கொட்டும்
நல்ல லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பண வரவு உண்டாகும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனைப் பேசி தீர்த்து சமாதானம் செய்து கொள்வது நல்லது. திடீர் திட்டங்களை போடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பணவரவு
பண வரவு ஏற்படும். கடன்களை எல்லாம் அடுத்தடுத்து அடைத்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆசுவாசமாக இருப்பீர்கள். கடந்த 10, 12 ஆண்டுகளாக தொந்தரவு அனுபவித்து வந்திருந்தவர்கள் இனிமேல் சந்தோஷமாக இருப்பீர்கள். உடற்பயிற்சி நன்றாக செய்வீர்கள். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
அனுகூலம்
வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு பெயர், புகழ் கிடைக்கும். வியாழக்கிழமையில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. முதுகுத்தண்டுவடம் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications