2023 புத்தாண்டு ராசிபலன்..காத்திருக்கும் சவால்கள்..சாதிக்கப்போகும் இந்த 4 ராசிக்காரர்கள்
சென்னை: நவ கிரகங்களின் பயணம் இடப்பெயர்ச்சி சிலரது வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும். சிலரது வாழ்க்கையில் யோகத்தை தரக்கூடும். சிலரது வாழ்க்கையை சவால்கள் நிறைந்த சம்பவங்களை ஏற்படுத்தி அனுபவங்களைக் கொடுக்கும். 2023ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது என நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ஏழரை சனி முடியப்போகும் தனுசு,ஏழரை சனி நடைபெறும் மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க சுக்கிரன் மகர ராசியில் சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் ஜனவரி மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் மே மாதம் முதல் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளையும் பொருளாதார வளர்ச்சியையும் தரப்போகிறது.
ராகு கேது பெயர்ச்சியும் அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கும் பயணம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் சில ராசிக்காரர்களுக்கு சோதனையையும் தரப்போகிறது. சில ராசிக்காரர்கள் சாதிக்கப்போகிறீர்கள். யாருடைய வாழ்க்கையில் நவ கிரகங்களும் அதிசயிக்கத்தக்க மாற்றத்தையும் வெற்றியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு இருந்த மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. எத்தனையோ அவமானங்கள் பட்டிருப்பீர்கள். இனி உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. காரணம் ஏழரை சனி முடியப்போகிறது. உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். காரணம் சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மிகப்பெரிய வெற்றிகளைத் தரப்போகிறார். மதிப்பும் அந்தஸ்த்தும் கூடி வரப்போகிறது. விடிவு காலம் வரப்போகிறது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பகவான் விரைய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். வெளிநாடு யோகம் வரப்போகிறது. படிப்பில் இருந்த மந்த நிலை மாறும் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். நல்ல முறையில் கல்வி பயில்வீர்கள். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். குரு பகவான் மே மாதத்திற்கு பிறகு 5ஆம் வீட்டிற்கு சென்று உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதன் மூலம் உங்களுக்கு பொன்னான காலம் வரப்போகிறது. வெற்றிகள் தேடி வரப்போகிறது. உங்களை விட்டு விலகிப்போனவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குரு பலன் வந்திருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். ராகுவின் பயணம் 5ஆம் வீட்டிற்கு வரப்போவதால் பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். வயிறு பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும் ஆண்டாக அமையப்போகிறது.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசியில் இருந்த சனிபகவான் 2023ஆம் ஆண்டு இடம்மாறி இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். தலைமேல் இருந்த சனிபகவான் இடப்பெயர்ச்சி அடைவதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ஏழரை சனியில் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை நீங்கள் கடத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையில் கடந்த 5 ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி எல்லாம் ஜெயம்தான். அந்த அளவிற்கு சனிபகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். மன உளைச்சல் நீங்கி நிம்மதி உண்டாகப்போகிறது. குருபகவானால் உங்களுக்கு ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சுப காரியம் கை கூடி வரப்போகிறது. காரணம் முதல் 4 மாதங்கள் குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்வையிடுவது நன்மையைத் தரும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானமான 4ஆம் வீட்டிற்கு இடம் மாறப்போகிறார். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மகாலட்சுமியின் அனுக்கிரகம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம். கல்லூரி மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. தடைகள் நீங்கி இனி உங்கள் கல்வியில் வெற்றிகள் கிடைக்கப்போகிறது. அரியர் வைத்திருந்தவர்கள் அனைவரும் இந்த ஆண்டு கிளியர் செய்து விட்டு வேலைக்கு தயாராகி விடுவீர்கள். அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரப்போகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் பண விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு பங்குச்சந்தை முதலீடுகளில் செய்து விட வேண்டாம். இந்த ஒரு விசயத்தை தவிர உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. இதுநாள் வரை நிறைய படிப்பினைகளை கற்றுக்கொண்டிருப்பீர்கள். ஏழரை ஆரம்பித்த நாளில் இருந்தே பிரச்சினைக்கு மேல் பிரச்சினைதான். எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் வருட ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார்.
ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கப்போகிறது. உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார். எதையும் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. சனி பகவான் நிறைய சோதனைகள் கொடுத்தாலும் கடைசியில் நன்மைகளையே செய்வார். ராசிக்குள் நுழையும் சனிபகவான் உங்களைப் பற்றியும் உங்கள் உறவுகளைப் பற்றியும் உங்களுக்கே புரிய வைப்பார். நிறைய அனுபவங்களை கற்றுத்தருவார் சனிபகவான். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் காட்டுவது அவசியம். கண்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள். குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பண வருமானம் அற்புதமாக இருக்கக் போகிறது. மே மாதம் வரைக்கும் குரு பகவான் 2ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரப்போகிறது. சந்தோஷம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மையைத் தரும். பண விசயங்களில் அகலக்கால் வைக்காதீர்கள். அப்புறம் அவதிப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளிநாடு செல்வதற்கு யோகம் வரப்போகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடப்போகிறீர்கள். ராகு பகவான் மூன்றாம் வீட்டிலும் கேது பகவான் ஒன்பதால் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசியிலேயே இருக்கிறார். ராசிக்கு 5 ஏழு ஒன்பதாம் வீடுகளைப் பார்வையிடுகிறார். திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிறைய யோகங்கள் கிடைக்கப்போகிறது. நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். மே மாதத்திற்குப் பிறகு உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் சென்று ராகு உடன் இணைவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு வரும். எப்போதோ கொடுத்து வைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவதால் ஏழரை சனி ஆரம்பிக்கப்போகிறது. நிதானமும் பொறுமையும் அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றிகள் கைகூடி வரும். ஐடி துறையில் வேலை கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. இரண்டாம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திண்டாடப்போகிறீர்கள். எனவே வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமையப்போகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications