செய்வினை, பில்லி,சூனியம் யாரை பாதிக்கும்?- பரிகாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்லா இருந்த புள்ள இப்படி பித்து புடிச்ச மாதிரி இருக்கே... ஏதாவது காத்து கருப்பு பட்டிருக்குமோ? ஏதாவது செய்வினை கோளாறோ என்று பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது சித்தர்கள் வாக்கு கூறியுள்ளார். தைரியசாலிகளை எதுவும் நெருங்குவதில்லை.

இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.

பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.

தற்கொலை எண்ணம்

தற்கொலை எண்ணம்

திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது
காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது. தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது. மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது. உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது. திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது. இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

சூனியம் வச்சிட்டாங்க

சூனியம் வச்சிட்டாங்க

மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒருவரின் சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது.
சூனியம் என்றால் ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை.

கொடுமையான மந்திரம்

கொடுமையான மந்திரம்

செய்வினை தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும்.

சந்திரன் நீசம் சனி சேர்க்கை

சந்திரன் நீசம் சனி சேர்க்கை

லக்னம் மற்றும் லக்னாதிபதி 6,8,12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது. சந்திரன் லக்னத்திற்க்கு 4,8,12 ஆகிய வீடுகளில் நிற்பது. சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது. சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது.

செய்வினை பலிக்காது

செய்வினை பலிக்காது

ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6,8,12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது. தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.

ரத்த சொந்தங்கள்

ரத்த சொந்தங்கள்

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும். கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள். கிரஹன காலங்களில் பிறந்தவர்கள். உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள். யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது

தியானம் செய்யலாம்

தியானம் செய்யலாம்

குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு. ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா தேவி வழிபாடு மற்றும் காளி வழிபாடு. மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி சென்று வர பாதிப்புகள் குறையும். சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி அம்மனை வழிபடலாம். மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.

வசியம் செய்ய முடியாது

வசியம் செய்ய முடியாது

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை கெட்ட சக்திகள் நெருங்குவதில்லை.
எக்காரியம் செய்தாலும் மனம் ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியத்தில் இருந்து தப்பிக்க வழியாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Astrology Remedies of Black Magic, Impacts of black magic, effects of black magic on Man, effects of black magic on females, impacts of black magic on spiritual people, Precautions to save our self from black magic, Astro remedies of black magic, Black magic healer, Vedic solution of Black magic, Astrologer for Black magic analysis and remedies.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற