• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னி, விருச்சிக ராசிக்காரங்க காதல் செய்யும் நாள்... துலாம் ராசிக்காரங்க கவனம்!

|

சென்னை: சந்திரனின் சஞ்சாரம் ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது. சின்னச் சின்ன மனக்குழப்பம் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

மிதுனத்தில் சூரியன், கடகத்தில் புதன், ராகு, சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் குருபகவான், தனுசுவில் சனி, மகரத்தில் கேது, செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. கன்னி ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும் இன்றைக்கு காதலில் திளைப்பீர்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கோவில் குளங்களுக்கு சென்று மனதை அமைதிபடுத்தவும்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்கு மாறுகிறார். பணவரவு அதிகரிக்கும். உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இன்று முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் அன்பிற்கு உரியவர் உங்களை வெறுத்தாலும் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும். ராசியான எண் 1 ராசியான நிறம் வெள்ளை, இளம் மஞ்சள்.

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் அமர்வதால் எதையும் கவனமாக கையாளுங்கள். நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். பிரச்சினைகளை தீர்க்க ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும். சாமர்த்தியமாக சமாளியுங்கள். உங்கள் ராசியான எண் 9. ராசியான நிறம் இளம் சிவப்பு, வெள்ளை.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் சுப விரைய செலவுகள் ஏற்படும். கஷ்டங்களை சிந்தித்து அதைப் பெரிதாக நினைப்பதால் உங்களின் தார்மிக நம்பிக்கை பலவீனமடையும். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். இன்று புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும்.உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும். ராசியான எண் 7. ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம்.

கடகம்

கடகம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் இன்று பணவரவு அதிகரிக்கும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள். இன்று நீங்கள் தொட்டது துலங்கும். அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். எந்தக் காரணம் கொண்டும் இன்று பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் வாழ்க்கை துணையுடன் இந்த நாளை பிரகாசமாக்குங்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள். ராசியான எண் 2. ராசியான நிறம் வெள்ளை, இளம் பச்சை.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 10 வது வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சந்திரனால் இன்று புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன் இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். மனஅமைதியை கெடுக்கும் சம்பவங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கும். ராசியான எண் 1,7. ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை

கன்னி

கன்னி

ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் அப்பாவின் உடல் நலம் பாதிக்கப்படும். மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனமாக செலவு செய்யாதீர்கள். அன்புக்குரியவருடன் உல்லாச பயணம் செல்ல இந்த நாளை தேர்ந்தெடுங்கள். காதலை சொல்ல நல்ல நாள் இது. இந்த நாளில் நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும். நீர்நிலைகளில் கவனம் தேவை. ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண் 4,8.

துலாம்

துலாம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்கிறார். சந்திராஷ்டம நாளான இன்று சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். விரைவில் பழைய நிலை திரும்ப ஆண்டவனை வேண்டுங்கள். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண் 5,9.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். வீட்டில் காதல், முத்தங்கள், அன்பான அணைப்பு, குதூகலம் என இன்று நாள் முழுக்க உங்கள் வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் தான் கொண்டாடுங்கள். ஊடல் இல்லாத கூடல் உப்பில்லாத பண்டம் போல.. சின்னச் சின்ன ஊடலையும் அனுபவியுங்கள். உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. ராசியான எண் 3. ராசியான நிறம் இளம் சிவப்பு, மஞ்சள்.

தனுசு

தனுசு

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைகிறார். ஜென்ம சனியும் அவ்வப்போது குடைச்சலை தருவார் என்பதால் வண்டி, வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வாக்குவாதங்கள், ஒப்புதல் இல்லாமையால் வீட்டில் சிறிது டென்சன் ஏற்படலாம். உமது காதலருக்குப் பிடிக்காத செயல்களை செய்யாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் வீட்டில் வாழ்க்கைத் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு கிடைக்கும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம். ராசியான எண் 3,9 ராசியான நிறங்கள் இளம் சிவப்பு, ஆரஞ்சு.

மகரம்

மகரம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் அவர்களை கண்டு கொள்ள வேண்டாம். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள். ராசியான எண் 9 ராசியான நிறம் இளம் சிவப்பு, பச்சை.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ள சந்திரனால் அம்மாவின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை இன்றைக்கு தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரித்து செலவுகளை இழுத்து விடும் என்பதால் கவனமாக இருக்கவும். வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் அது கடினமாகவும் அதே நேரத்தில் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள். ராசியான எண் 6,9 ராசியான நிறம் இளம் சிவப்பு, வெள்ளை

மீனம்

மீனம்

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும்.அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். இன்று பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாதகமான ரிசல்ட் பெறுவதற்கான ஒரே வழி. உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ராசியான எண் 4, ராசியான நிறம் நீலம், வெள்ளை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
There are twelve zodiac signs and each has its distinct feature. Be it, Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces - each of the signs have something unique to tell. Check out today's horoscope.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more