வைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள்

Posted By: c JEYALAKSHMI
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகாசி மாதத்தில் திருமணம் சீமந்தம், உபநயனம், காது குத்த, புது வண்டி வாங்க, தொழில் தொடங்க, கட்டிடம் கட்ட வாஸ்து செய்ய முக்கிய நாட்களைப் பார்க்கலாம்.

ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிகளை நல்ல நேரம், நாள் பார்த்து செய்வது வழக்கம். வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான நல்ல நாட்களை அறிந்து கொள்வோம்.

Important days and date of Vaikasi month 2018

வாஸ்து நாள்

வைகாசி மாதம் 21ஆம் தேதி அதாவது ஜூன் 4 ஆம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாளாகும். இந்த நாளில் காலை 10.02 மணிமுதல் 10.30 மணிவரை வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

நல்ல நாட்கள்

  • கிரகப்பிரவேசம் செய்ய வைகாசி 20,21,27 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள்
  • காது குத்த வைகாசி 6,11,13 ஆகிய தேதிகள் காலை 8 மணி முதல் 10 மணிவரை நல்ல நேரமாகும்.
  • தில ஹோமம் செய்ய வைகாசி 1, வைகாசி 22, 30 நல்ல நாட்கள்
  • புது வண்டி, வாகனம் வாங்க வைகாசி 6, 11,21,27 நல்ல தினங்களாகும். இந்த தினங்களில் புது வண்டி வாங்கலாம்.
  • வைகாசி 5,9,15,19,22,24,29 ஆகிய நாட்களில் பகல் 12 முதல் 1 மணிக்குள் கடன்களை திருப்பி தரலாம். கடன் சுமை குறையும்.

ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள:

வைகாசி 4 மே 18 வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரம் பகல் 1 - 2 மணிவரை சிம்ம லக்னம்

வைகாசி 5 மே 19 சனிக்கிழமை புனர்பூசம் பகல் 12.30 - 1.30 மணிவரை சிம்ம லக்னம்

வைகாசி 6 மே 20 ஞாயிறு பூசம் பகல் 1.30 - 2 சிம்ம லக்னம்

வைகாசி 11 மே 25 வெள்ளி ஹஸ்தம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்

வைகாசி 13 மே 27 ஞாயிறு சுவாதி பகல் 11.40 - 12 சிம்ம லக்னம்

வைகாசி 15 மே 29 செவ்வாய் அனுசம் பகல் 12 -1 சிம்ம லக்னம்

வைகாசி 19 ஜூன் 2 சனி உத்திராடம் பகல் 12 - 1 மணிவரை சிம்ம லக்னம்

வைகாசி 20 ஜூன் 3 ஞாயிறு உத்திராடம் பகல் 11.15 - 11.50 மணிவரை சிம்ம லக்னம்

வைகாசி 21 ஜூன் 4 திங்கட்கிழமை திருவோணம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்

வைகாசி 27 ஜூன் 10 ஞாயிறு அசுவினி பகல் 12 - 1 சிம்ம லக்னம்

வைகாசி 28 ஜூன் 11 திங்கள் பரணி பகல் 12 - 12.30 சிம்ம லக்னம்

வைகாசி 29 ஜூன் 12 செவ்வாய் கிருத்திகை பகல் 11 -12 சிம்ம லக்னம்

வைகாசி மாதம் 14ஆம் தேதி மே 28 ஆம் தேதி திங்கட்கிழமை விசாகம் நட்சத்திரம் இன்று முருகப்பெருமானை வழிபட்டால் வியாபாரம், வழக்கில் வெற்றி பெறலாம்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vaigasi - Second month on tamil calendar. Vaigasi month have 31 days. Important mukurtham days of Tamil Month of Vaikasi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற