Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் காமிகா ஏகாதசி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள்

ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஏகாதசி நாளில்விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்ய மங்கல காரியங்கள் நடக்கும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளி நமது இல்லத்தில் மகால

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏகாதசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் அருள் கிடைப்பதோடு அதன் முலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் மட்டும் 25 ஏகாதசிகள் வர வாய்ப்பு உண்டு. வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.
ஏகாதசிக்கு மறுநாள் அதாவது துவாதசி அன்று ஆரத்தி எடுத்து விட்டு துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் சாப்பிடலாம்.

ஏகாதசி விரத மகிமை

ஏகாதசி விரத மகிமை

முன்னொரு காலத்தில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்த போதும் அவருக்கு, கோபம் என்னும் குறை அவரிடம் இருந்துவந்தது. ஒருமுறை, தன் அண்டை வீட்டு வேதியரோடு சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் அந்த செல்வந்தர் அந்த வேதியரைக் கொன்றார். இதனால் அந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த செல்வந்தர் தன் மன நிம்மதியை இழந்தார். செல்வங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிச் சென்றது. தனக்கு நல்வழிகாட்டுமாறு முனிவர் ஒருவரை சரணடைந்தார். அப்போது அந்த முனிவர் காமிகா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அதை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்.

தோஷம் நீங்கும்

தோஷம் நீங்கும்

செல்வந்தர், முறையாக பக்தியோடு காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, துளசி இலைகளால் திருமாலைப் பூஜித்து வழிபட்டார். அன்றைய இரவு அவரின் கனவில் தோன்றிய பெருமாள் எந்தப் பாவத்தையும் போக்கும் காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டதால் உன்னைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

நாரதர் சொன்ன புராண கதை

நாரதர் சொன்ன புராண கதை

யார் ஒருவர் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்து பின்பு அதிலிருந்து தப்ப காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள முயன்றால் அது அவனுக்குப் பலிக்காது. நீ அறியாமல் செய்ததால் அது உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்லி அவனுக்கு அருள் செய்தார். மறுநாள் முதல் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் திரும்பப் பெற்ற அந்த செல்வந்தர், பகவான் விஷ்ணுவுக்கு நன்றி கூறி வணங்கினார். அவரின் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் எளிமையும், பக்தியும் கொண்டு வாழ்ந்தார். இந்தக் கதையை நாரதர் உபதேசித்ததாக ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது.

புண்ணியம் கிடைக்கும்

புண்ணியம் கிடைக்கும்

இன்றைய தினம் காமிகா ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியமானது பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தைவிடவும் பலமடங்கு புண்ணியத்தை வழங்கவல்லது. மற்ற ஏகாதசிகளைவிட மிகுந்த பலன்களை காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதன்மூலம் பெறமுடியும்.

ஏகாதசி விரத புண்ணியம்

ஏகாதசி விரத புண்ணியம்

ஆடிமாத காமிகா ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இந்த நாளில் தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் திருவுருவத்தை வழிபட வேண்டும். அவ்வாறு வணங்க, கங்கையில் நீராடி காசி, நைமிசாரண்யம், புஸ்கர் ஆகிய புண்ணியத் தலங்களில் தங்கும் பலன்களைப் பெறுவர்.

மனத்தூய்மை அதிகரிக்கும்

மனத்தூய்மை அதிகரிக்கும்

காமிகா ஏகாதசியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள், தாமரை இலையைத் தண்ணீர் எப்படித் தீண்டுவதில்லையோ அப்படி, பாவம் ஒருபோதும் அவர்களைத் தீண்டுவதில்லை. காமிகா ஏகாதசி நாளில் துளசி இலைகொண்டு பகவான் விஷ்ணுவை வழிபட உடல் தூய்மையும் மனத்தூய்மையும் கிடைக்கும்.

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண அர்ப்பணிப்போடு காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும், பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

யாகம் செய்த புண்ணியம்

யாகம் செய்த புண்ணியம்

பசு கன்று தானம் செய்த பலன். குருக்ஷேத்ராவில் கிரஹணம் போது ஸ்தானம் செய்தல், அஸ்வமேத யாகம், காசியில் கங்கா ஸ்தானம் செய்தல், பத்ரி கேதார யாத்திரை செல்லல், பூமி தானம் செய்தல் ஆகியவற்றால் கிடைக்கும் புண்ணியம் இந்த காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கிடைக்க பெறுகிறார்கள்.

விஷ்ணுவை வணங்கலாம்

விஷ்ணுவை வணங்கலாம்

காமிக ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு யம பயம் அல்லது மரண பயம் உண்டாகாது. மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்க பெறுகிறார்கள். பித்ரு தோஷங்கள் நீங்குகிறது. செல்வ வளம் மிக்க வாழ்க்கைக்கும், நோய்கள் பிடிக்காத உடல் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க இந்த காமிக ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது அவசியம் என சான்றோர்கள் அறிவுறுத்துகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த ஆடி தேய்பிறை ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் அன்றைய தினம் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வதால் விரதம் மேற்கொண்ட பலன்களை பெறலாம் என கூறப்படுகிறது.

மூலிகை அபிஷேகம்

மூலிகை அபிஷேகம்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஏகாதசியான இன்று 4.08.2021,புதன் கிழமை காலை வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி அருள் பாவிக்கும் நோய் தீர்க்கும் கடவுளும், காக்கும் கடவுளுமான

ஸ்ரீ தன்வந்திரி பகவானை வேண்டி பல்வேறு மூலிகைகள் கொண்டு தன்வந்த்ரி ஹோமமும், நெல்லிக்காய் பொடி திருமஞ்சனமும் காலை 10 மணி யளவில் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+