நடிகர் அரசியல் கட்சி தொடங்குவார்... தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை: நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் என பலரும் அரசியல் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் பிரபல நடிகர் கட்சி தொடங்குவார் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது. முதல்வராக ஈபிஎஸ், துணை முதல்வராக ஓபிஎஸ் இருந்தாலும் சரியான தலைமை அமையவில்லை என்பதே தொண்டர்களின் கருத்து.

  திமுக தலைவர் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி தற்போது ஓய்வில் இருக்கிறார். செயல்தலைவராக ஸ்டாலின் இருந்தாலும் திமுக தொண்டர்களிடையேயும் ஒருவித மனக்குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

  தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸ்சில் இல்லை. எனவே தமிழக அரசியலில் புதிய தலைமை வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  நடிகர்களின் அரசியல் ஆர்வம்

  நடிகர்களின் அரசியல் ஆர்வம்

  நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. 1996 ஆம் ஆண்டு அவர் ஜெயலலிதாவிற்கு எதிராக வாய்ஸ் கொடுத்த போதே ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. ஆனால் ரஜினியோ இதோ... அதோ என்று போக்குக்காட்டிக்கொண்டிருக்கிறார்.

  காத்திருக்கும் ரசிகர்கள்

  காத்திருக்கும் ரசிகர்கள்

  ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் 20 ஆண்டுகாலமாக காத்திருக்கின்றனர். ஆனால் அவரோ போர் வரட்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த போதும் இதையேதான் கூறினார். மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி.

  கமலின் அரசியல் ஆர்வம்

  கமலின் அரசியல் ஆர்வம்

  நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ட்விட்டரில் அரசியல் நடத்தி வருகிறார். ரசிகர்களை சந்தித்த கமலின் திடீர் அரசியல் பேச்சுக்கள், வேறு மாநில முதல்வர்களுடனான பேச்சு என திடீர் பரபரப்பை எற்படுத்தினார். கட்சியை உடனே தொடங்க முடியாது என்று கூறி தனது பிறந்தநாளில் விசில் ஆப் மட்டும் அறிமுகப்படுத்தினார். அப்புறம் படப்பிடிப்பில் பிசியாகி விட்டார்.

  இடைத்தேர்தல் கலாட்டா

  இடைத்தேர்தல் கலாட்டா

  நடிகர் விஷால் திடீரென ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தால். சில காரணங்களினால் வேட்புமனு தள்ளுபடியானது. அப்புறம் அவரைப்பற்றி எந்த அறிவிப்பும் காணோம்.

  பஞ்சாங்கம் கணிப்பு

  பஞ்சாங்கம் கணிப்பு

  2018-2019 ஆம் ஆண்டுக்கான விளம்பி வருஷத்திய வாக்கிய பஞ்சாங்கத்தில் பிரபல நடிகர் கட்சி ஆரம்பிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடிகரின் அரசியல் கட்சியினால் ஆளுங்கட்சியினருக்கு தொல்லைகள் ஏற்படும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நடிகர் கமல், ரஜினி, விஷால் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Some predictions of new political party TamilNadu, famous Tamil Actor launch new political party on Tamil New Year Vilambi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற