• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகு கேது பெயர்ச்சி 2019 - 2020: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள் - பரிகாரங்கள்

|

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் கடக ராசியில் இருந்து மிதுனத்திற்கும் மகர ராசியில் இருந்து தனுசு ராசியிலும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளன. மூன்றாவது வீடு தைரிய வீரிய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். ஒன்பதாம் வீடு உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், தந்தையை குறிக்கும்.

பொதுவாகவே ராகு கேதுகள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். மிதுனம் புதன் வீட்டின் அதிபதி தனுசு குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு அதிக காதலையும் தனுசில் உள்ள கேது அதிக ஆன்மிகத்தையும் அளிப்பார்.

தனுசு ராசியான ஒன்பதாம் வீட்டில் சனியுடன் கேது சேர்ந்திருக்கிறார். தொடர்ந்து 42 நாட்களுக்கு பைரவரை வழிபட வேண்டும்.

ராகு கேதுகள் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ராகு கேது பெயர்ச்சி எப்படி என்று பார்க்கலாம்.

[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

மேஷம்

மேஷம்

மேஷத்தை மோஷம் செய்த கிரகங்கள் இனி பாசத்தை பரிசளிக்கும் வாழ்த்துக்கள். மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் சில நேரங்களில் நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வளர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சனியோடும் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படும் கவனம் தேவை. பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். கேது பகவான் உங்கள் உடல்நிலையில் சிரமத்தை ஏற்படுத்துவார். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. தினசரியும் துர்க்கா அஷ்டோத்திரம் படிக்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. ஜென்ம ராகுவினாலும் களத்திர ஸ்தான கேதுவினாலும் நன்மை கலந்த தீமைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள்.

புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. 12 ஆம் இட ராகு ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நீண்டநாள் உடல் உபாதைகள் நீங்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கேது பகவான் எதிரிகளை வெல்வார். கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. சிறப்பான தன லாபம் கிடைக்கும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி புதிய அனுபவங்களை ஏற்படுத்தி கொடுப்பார். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.

வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார்.

கேதுவின் 3ஆம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சிறு சலசலப்பை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பாதிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வது உடல்நிலையில் சில கவலைகளை ஏற்படுத்தும். பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தை அள்ளித்தரப்போகிறது. ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமர்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் நிலை பாதிப்புகள் வந்து போகும். ஞாயிறன்று பிரத்யங்கிரா தேவியை வணங்குங்கள். காகத்திற்கு எள் சாதம் வைப்பது நல்லது.

மகரம்

மகரம்

புயலில் சிக்கிய படகாய் தவித்துக்கொண்டிருந்த மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் அமர்ந்துள்ளனர். தொழிலுக்காக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும். நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சமாகும். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும்.

வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.

 
 
 
English summary
Rahu and Ketu are about to change signs on March 7, 2019 and create significant changes in your life. These planets are indicators of your past life karma and play a major role in shaping your present life situations. During this transit, Rahu brings focus and ongoing efforts, while Ketu supports by giving higher knowledge and helps convert efforts regarding financial gains to be fruitful. Overall, this transit of Rahu and Ketu helps you to be focused, improve, progress and conquer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X