பக்தர்கள் கவனத்திற்கு.. சதுரகிரி கோவில்.. 4 நாட்களுக்கு அனுமதி
விருதுநகர்: பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26ம் தேதி முதல் 29 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நாட்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

அதன்படி நாளை மார்ச் 26-ம் தேதி பிரதோஷம் மற்றும் 28-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26ம் தேதி முதல் 29 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.
பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26ம் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் கோவிலில் தங்கவும் அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.