For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைபூசம்: தன்வந்திரி பீடத்தில் திருமண தடை நீக்கும் ஹோமம் - வள்ளலார் வழிபாடு

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.

நோய்க்குத் தீர்வு மருந்துதான். அதுபோல் எந்த ஒரு தோஷத்துக்கும் தீர்வு நாம் செய்கிற பரிகாரம்தான். இதுவே சிறந்த நிவாரணம். எந்த ஒரு பிரச்னை நிவர்த்தி ஆவதற்கும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து பரிகார ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள்.

பலரது குடும்பங்களிலும் இன்றைக்கு இருக்கிற பிரச்னை காலாகாலத்தில் தங்கள் வீட்டில் இருக்கிற பையன் மற்றும் பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதுதான்! இன்றைக்கு மணப்பெண் அமைவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். ஒன்று இருந்தால், இன்னொன்று அமைய மாட்டேன் என்கிறது. அதைபோன்று குழந்தை பாக்யம் இல்லாமையும் ஆகும்.
இந்த நிலையில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ள பையன்/பெண் ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வந்து இங்கு ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள் பல பெற்றோர்கள். பலரது வாழ்க்கையிலும் கெட்டிமேள ஓசை ஒலிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி இங்கே சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

பகவான் திருக்கல்யாணம்

பகவான் திருக்கல்யாணம்

சமீபத்தில் தன்வந்திரி குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியரான திரு சீனிவாச சம்பத் அவர்கள் ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆரோக்யலக்ஷ்மித் தாயார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு வெகு விமரிசையாக இந்த வைபவம் நடந்தது. திருமணம் ஆக வேண்டிக் காத்திருக்கும் ஏராளமான இளம் பிராயத்தினரும் இதில் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

பரிகார ஹோமங்கள்

பரிகார ஹோமங்கள்

நோய்க்குத் தீர்வு மருந்துதான். அதுபோல் எந்த ஒரு தோஷத்துக்கும் தீர்வு நாம் செய்கிற பரிகாரம்தான். இதுவே சிறந்த நிவாரணம். எந்த ஒரு பிரச்னை நிவர்த்தி ஆவதற்கும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து பரிகார ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள்.

மந்திரங்களின் பலன்

மந்திரங்களின் பலன்

ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

நன்மை தரும் ஹோமங்கள்

நன்மை தரும் ஹோமங்கள்

ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றி வைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்திர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

தம்பதிகள் வாழ்வு சிறக்கும்

தம்பதிகள் வாழ்வு சிறக்கும்

முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன என்பது உண்மை. இந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் - பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும் ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

குழந்தை வரம் தரும் ஹோமம்

குழந்தை வரம் தரும் ஹோமம்

திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் வருகிற 31.01.2018 புதன் கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமங்களில் கலந்துகொண்டு தன்வந்திரி பகவான் அருளும் ஆசியும் பெற தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

வள்ளலார் வழிபாடு

வள்ளலார் வழிபாடு

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

ஜோதி தரிசனம்

ஜோதி தரிசனம்

அற்புதங்கள் நிறைந்த வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி வருகிற 31.1.2018 தைபூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெற உள்ளது.

தைபூசம் ஹோமம்

தைபூசம் ஹோமம்

வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம், மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். தை பூசம் நாளில் அன்னதானமும் நடைபெற உள்ளது.

English summary
Special arrangements are being made at Sri Danvantri Arogya Peedam, Walajapet, to celebrate Thai Poosam festival which falls on 31st January 2018. Arutperunjothi Vallalar’s black stone idol has been installed at the peedam and abishekam, mantra japa homam, Arutpa recital, annadhanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X