திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி எழுந்தருளிய சண்முகர்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் எட்டாம் திருநாளான நேற்று சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் ஏழாம் திருநாளான்று சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்த சண்முகர், எட்டாம் திருநாளன்று வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் எழுந்தருளினார். சிவன்,பிரம்மா,விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி கோலத்தில் அருள்பாலித்த
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாள் முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மா விஷ்ணு சிவன்
முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி சண்முகர் அருள்பாலிக்கிறார். சிவப்பு சாத்தி எழுந்தருளும் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

சிவன் அம்சம்
ஏழாம் திருநாளன்று மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி, சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சண்முகர் தரிசனம்
8ஆம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பிரம்மாவின் தரிசனம்
வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

சண்முகரின் தரிசனம்
அபிஷேகத்திற்குப் பிறகு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். சண்முகர் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்து தனது இருப்பிடம் சேர்ந்தார். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மும்மூர்த்திகள் தரிசனம்
பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு. சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரோட்டம் ரத்து
ஆவணித் திருவிழாவில் 10-ம் நாளில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10ஆம் நாளான நாளை மறுநாள் காலையில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்மாளும் தனித்தனிச்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள் வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலிலும் நாழிக்கிணற்றில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications