For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்

சித்ராபெளர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.

Google Oneindia Tamil News

மதுரை: ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர் எதிரில் துலாம் ராசியில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளில் பௌர்ணமி வருவதால் ,சித்ரா பௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது. ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

Worshiping Chitragupta from Chitra Pournami fasting will cure diseases and prolong life

சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். இந்திரன் பாப விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாதரைத் தரிசித்து பாப விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி. மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் கால் பதிக்கும் நாள் சித்ரா பௌர்ணமி.

சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்று புராணங்கள் கூறுகின்றன. ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர்'சித்ரகுப்தன்'என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர்.

சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். பௌர்ணமி தினத்தில் அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. தாய் கிரகமான சந்திரன் தந்தை கிரகமான சூரியனிடம் இருந்து வெப்ப ஒளியைப்பெற்று, பூமிக்கு குளிர்ந்த ஒளியைக் கொடுக்கும். சந்திரன் மிகப் பிரகாசமாகவும்,களங்கம் இல்லாமலும் மிக அதிக சக்திமிக்கதுமாக ஒளிர்கிறது.எனவேதான் அன்றைய தினம் ஆற்றங்கரைகளில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகின்றனர்.

Worshiping Chitragupta from Chitra Pournami fasting will cure diseases and prolong life

சந்திரன் அந்த சக்திமிக்க ஒளியை சித்ரா பௌர்ணமி அன்றுதான் கொடுக்கிறது. அறிவியல் ரீதியாக மனிதர்களின் ஆரோக்கியம் கூடுகிறது. சந்திரன் மனதுக்காரகன் ஆதலால் மனபலம் கூடுகிறது.

சித்ரா பௌர்ணமியில் பாவ புண்ணியக்கணக்கு எழுதும் சித்ரகுப்தர் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம், மனோசக்தி கூடி பலம் பெறும் அந்த நாளில் மனதை செம்மைபடுத்துகிறார் சித்ரகுப்தர். நிலவு ஒளியில் குடும்பம், உறவுகள் இணைந்து உண்டு மகிழ்வதால் மனமகிழ்வும் ஆரோக்கியமும் ஆத்ம பலமும் கூடுகிறது.

நவக்கிரக கேதுவின் தேவதை 'சித்ரகுப்தர் எனவே கேதுவினால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள் சத்ரு துன்பங்கள் நீங்கும். சித்ராபௌர்ணமி விரதம் இருந்தால் நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோஷனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது திருமணத்தடைகள் நீங்கும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது.

சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். உப்பில்லாத உணவுகளையே சாப்பிட வேண்டும்.

Worshiping Chitragupta from Chitra Pournami fasting will cure diseases and prolong life

சித்ரா பவுர்ணமியான இன்று மாலையில் பவுர்ணமி உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பாசிப் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. இதன் மூலம் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

English summary
Chitra pournami is one of the important festivals celebrated in Tamil nadu.This auspicious day is celebrated as Chitragupta’s Birthday. Chitra Pournami ritual commemorates Chitra gupta who is known as the assistant of Lord Yama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X