பங்குனி உத்திரம், உகாதி...இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நடைபெறும் தெரியுமா
பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். இந்த மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாணங்களைக் கண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: பங்குனி மாதம் மீன மாதம். இந்த மாதத்தில் சூரியன் மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் பங்குனி உத்திரம், விஜய ஏகதசி உள்ளிட்ட பல பண்டிகைகள் உள்ளன. பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். இந்த மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாணங்களைக் கண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். ஞானகுருவாகிய ஐயப்பன் அவதரித்தது இந்த பங்குனி மாதத்தில்தான். மகாலட்சுமி இந்த மாதத்தில் வரும் பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் இடம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியின் அவதாரம் நிகழ்ந்த நாளும் பங்குனி உத்திர நாள்தான். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். தெய்வீக அருள் நிறைந்த இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நடைபெற உள்ளன என்று பார்க்கலாம்.
பங்குனி 1 செவ்வாய்க்கிழமை ருண விமோசன பிரதோஷம்
பங்குனி 3 வியாழக்கிழமை பங்குனி பவுர்ணமி பூஜை
பங்குனி 04 வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் , ஹோலி , பௌர்ணமி விரதம்
பங்குனி 07, திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்
பங்குனி 08 செவ்வாய்கிழமை ரங்க பஞ்சமி
பங்குனி 09 புதன்கிழமை சஷ்டி விரதம்
பங்குனி 10 வியாழக்கிழமை சீதாள சப்தமி
பங்குனி 11 வெள்ளிக்கிழமை திரியம்பகாஷ்டமி
பங்குனி 14 திங்கட்கிழமை திருவோணம் விஜய ஏகாதசி சிரவணவிரதம்
பங்குனி 15 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம்
பங்குனி 17 வியாழக்கிழமை மாத சிவராத்திரி
பங்குனி 18 வெள்ளிக்கிழமை சர்வ அமாவாசை
பங்குனி 19 சனிக்கிழமை இளவேனில்காலம் , சந்திர தரிசனம் , உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு
பங்குனி 21 திங்கட்கிழமை கார்த்திகை விரதம் , மத்ஸ்ய ஜெயந்தி , சோமவார விரதம்
பங்குனி 22 செவ்வாய்கிழமை கூர்மஜெயந்தி
பங்குனி 24 வியாழக்கிழமை சஷ்டி விரதம்
பங்குனி 27 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராமநவமி , குருத்து ஞாயிறு
பங்குனி 29 செவ்வாய்கிழமை காமதா ஏகாதசி விரதம்
பங்குனி 30 புதன்கிழமை தமனத்துவாதசி
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications