For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி பெயர்ச்சி 2022: இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிதசையில் அள்ளிக்கொடுப்பாராம்

ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று பலரும் பேசுவார்கள். சிலருக்கு சனி தசை, சனி புத்தி காலத்திலும் பாதிப்பு ஏற்படும். மேஷம் முதல் மீனம் வரை சனிபகவான் எந்த லக்னத்திற்கு நன்மை செய்வார், பாதிப்பை தருவார் எ

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். சனி தசை சனி புத்தி காலத்தில் பலன்கள் யாருக்கு பாதிப்புகள் யாருக்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

தசாபுத்தி என்பது நவகிரகங்கள் சில ஆண்டுகள் தங்களின் பிடியில் வைத்திருக்கும். கேது முதல் புதன் வரை மொத்தம் ஒன்பது தசா காலங்கள் உள்ளன. ஒன்பது தசாகாலத்திலும் சுய புத்தி தொடங்கி வரிசையாக ஒன்பது புத்திகள் நடைபெறும். அப்போது நன்மையோ, தீமையோ அவர்களின் கர்மா பலன்களுக்கு ஏற்ப நடைபெறும்.

நவகிரகங்களில் சனி பகவான் நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம். சனி போல பணத்தை அள்ளிக்கொடுப்பவர் யாரும் இல்லை. சனி திசை காலத்தில் தொழில் தொடங்குவார்கள். சனி எங்கிருந்தால் அதிர்ஷ்டம் என்று பார்த்தால். துலாமில் சனி உச்சமடைபவர். சனி உச்சம் பெற்றவர், சனி பார்வை துலாம் ராசியில் விழுந்தால் அவர்கள் நீதி துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.

ஆயுள்காரகன் சனி

ஆயுள்காரகன் சனி

நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும்.

 சனி தசையால் யோகம்

சனி தசையால் யோகம்

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். மேஷம் விருச்சிகம், லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார் கடகம், சிம்மம் , தனுசு, மீனம் லக்னங்களுக்கு சனி சுமாரான பலன்களையே சனி திசை கொடுக்கும். சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் சனி தசை அல்லது புத்தி சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும்.

உச்சம் பெற்ற சனியின் பார்வை

உச்சம் பெற்ற சனியின் பார்வை

மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய வீடுகளை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சனி தசை அல்லது புத்தி என்பது மத்திம பலனைத்தான் தரும். ஒருவருடைய சுய ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் கூட சனி தசை அல்லது புத்தி ஓரளவு நல்ல பலன்களை அந்த ஜாதகருக்குத் தரும்

சனியின் தயவு தேவை

சனியின் தயவு தேவை

சனி பிறவி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். நிறைய சோதனைகள் வந்து அவர்களை சாதனைகள் புரிய வைப்பார். அரசியலில் புகழ் பெற்று திகழவேண்டும் என்றால் அவருக்கு சனி நல்ல உதவி செய்வார். அதே நேரம் சனி நோய்கள், விபத்திற்கும் காரகர். சனி சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும்.

 சனி சாந்தி ஹோமம்

சனி சாந்தி ஹோமம்

சனி பகவான் நியாயவான். அவருக்கு மேஷம் நீச வீடு துலாம் உச்ச வீடு. மகரம் கும்பம் ஆட்சி வீடுகள். சனி தசை காலத்தில் சனி தசை சூரிய புத்தி, சனி தசை சந்திர புத்தி சுமாரான பலன்களை கொடுப்பார் பரிகாரம் செய்ய வேண்டும். சனி தசை ராகு புத்தி, சனி தசை கேது புத்தி செய்யும் போதும் பரிகாரம் பண்ணலாம். சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். இதே போல சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும்.

தானம் கொடுத்தால் சனிக்கு மகிழ்ச்சி

தானம் கொடுத்தால் சனிக்கு மகிழ்ச்சி

திருக்கொள்ளிக்காடு பொங்குசனி பகவான், ஏழரை சனி பகவானை வணங்கலாம். அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் குச்சனூர் சென்று சனிபகவானை வணங்கலாம். திருநள்ளாறு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். அவரை வழிபட சனி தசை சனி புத்தி நடப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். யார் ஒருவர் நிறைய தானம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிறைய நல்லது நடைபெறும். வஸ்திர தானம், இரும்பு தானம் செய்யுங்க. நோய், கடன் எதிரிகள் தொல்லை நீங்கும். அமாவாசை தர்ப்பணம் செய்பவர்கள் எள் தண்ணீர் வைத்து வணங்க வேண்டும். முன்னோர் கடன் செய்பவர்களுக்கு சனி பகவான் பாதிக்கமாட்டார். சனிதிசை காலத்தில் இரும்பு தானம் செய்யலாம். நல்ல தர்மசிந்தனையோடு இருங்கள் சனிபகவான் உங்களுக்கு நல்லது கொடுப்பார். புண்ணியம் செய்தால் சனிபகவான் நிறைய வாரி கொடுப்பார். நியாயவாதிகளாக நடந்து கொள்பவர்களுக்கு சனி நல்லதே செய்வார். சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமம் செய்யலாம். தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.

English summary
Sani Peyarchi 2022 Sani Dasa and Sani buthi: (சனி பெயர்ச்சி காலத்தில் சனி தசை சனி புத்தி நடந்தால் என்ன பலன்) sani or saturn is the most dreaded graha in Hindu astrology.Sani is most powerful place in the chart is in the 7th house. He is a particularly beneficial planet for Rishapam, mithnam, kanni, Thulam, makaram and Kumbam ascendants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X