சரஸ்வதி யோகம் : உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கா நீங்க அதிர்ஷ்டசாலிதான்
கல்வி வளம் சிறக்க சரஸ்வதி தேவியின் அருள் அவசியம். இன்று அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.
சென்னை: சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நாளில் அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம். ஜாதகத்தில் உள்ள அபூர்வமான சரஸ்வதி யோகம் பற்றியும் அதனால் ஏற்படும் பலன்களை பற்றியும் இங்கு காணலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாட்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்றைய தினம்கூத்தனூர் சரஸ்வதி கோயில்,வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சரஸ்வதி தேவியை கல்வி, செல்வம், வெற்றிகள் ஆகியவற்றை அள்ளித் தரும் தேவியாகப் பூஜை செய்யும் நாட்களே சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத ஊற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.
சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். ஞானம், அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி. அறிவும், ஞானமும் உறுதியானது. நம்முடனே வருவதும் அன்னத்தினை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியினை நாம் பார்க்கின்றோம். அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல் நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள்.
ஜாதகத்தில் சரஸ்வதி யோகம்
ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் நவ கிரகங்களில் ராஜ கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதியின் அருளாற்றல் நிறைந்த "சரஸ்வதி யோகம்" ஏற்படுகிறது. தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் 1,2,4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள்.
புத்திசாலி பிள்ளைகள் வேண்டும் என்பதே பலரது ஆசை. வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.
சிறந்த எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சு மற்றும் எழுத்து திறன் கவிதை நயம் மிக்கதாகவும், வெகுஜனங்களை கவர்ந்திழுக்க கூடியதாகவும் இருக்கும். ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைகளில் சிறந்த திறமையாளர்களாக விளங்குவார்கள். ஒரு சிலர் திரைப்படம், நாடகம், இசையமைப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு மக்களின் மிகுந்த அபிமானத்தையும், பெருமளவில் செல்வத்தையும் ஈட்டுவார்கள். பெருமளவில் புகழ், பணம் போன்றவை கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தில் 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று சிறப்பாக வாழ்வோம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications