தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு
தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், மகர ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.
தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.
இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மகர ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்களைப் பொருத்தவரை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பல நெருக்கடிகளை சந்தித்திருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மகத்துவம் நிறைந்த ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் நகர்வு இருப்பதால் ஏழரை சனியின் பெரிய பாதிப்புகளில் இருந்து விலகப் போகிறீர்கள். அத்தனை பிரச்சனைகளும் சீராகும். சிந்தனைகள் தெளிவடையும். தெளிவாக பயணிக்கும் காலகட்டமாக இருக்கும்.
நிம்மதி, பணம், குடும்பம், உறவுகள் என எதையெல்லாம் இழந்தீர்களோ அத்தனையும் கிடையும். ராசிக்கு 3 ஆவது இடத்தில் சனி மறைவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். சுபகாரியங்கள் நடக்கும். திருமண யோகம் கூடி வரும். வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும். தொழில் செய்து நஷ்டத்தை சந்தித்தவர்கள், கடன் சுமையில் இருந்தவர்கள் எல்லோரும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலில் வெற்றி பெற்று சாதித்து காட்டுவீர்கள்.
எதை எந்த இடத்தில் தொலைத்தீர்களோ அதே இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குல தெய்வத்தின் அனுகூலம் உண்டாகும். 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுப விரையங்களை செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். வெளிநாடு வாழ் மக்களுக்கு மிகச்சிறந்த பொற்காலம் உண்டாகும். வேற்று இனம், வேற்று மொழி, வேற்று மதம் சார்ந்தவர்களால் மிகப்பெரிய ஆதாயம் உண்டாகும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
கடன் தீரும். மண் வாங்குவது, நிலம் வாங்குவது, வீடு கட்டலாம். தொழில் செய்யலாம். எந்த முடிவுகளை வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் எடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
எச்சரிக்கை
பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு 6 ஆம் இடத்துக்குச் செல்வதால் பணம் சார்ந்த விஷயங்களில், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. 2 இல் ராகு இருப்பதால் நல்லதை பேசினாலும் கெட்டதில் முடியும். வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. 8 இல் கேது வருவதால் கூடா நட்பு உங்களிடம் வரும். முன்பின் தெரியாத நபர்களிடம் பழகும்போது எச்சரிக்கை தேவை. இல்லையெனில் ஏதாவது ஒன்றில் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பெண்கள், மாணவர்கள்
மாணவர்களைப் பொருத்தவரை கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேண்டிய துறைகள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மருத்துவம், தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். நீதித்துறை சார்ந்து படிப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். கடின உழைப்பால் பெண்கள் உச்ச பலன்களை அடைவார்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். தொழில் முறையில் அசாத்திய வெற்றி அடையும் காலகட்டமாக இருக்கும். சனி பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.
மதிப்பெண்
மகர ராசிக்காரர்களுக்கு 100க்கு 90 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்
மலையின் மீது இருக்கக்கூடிய முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. ஆசிரமங்களுக்குச் சென்று ஒருவேளை அன்னதானம் செய்வது மிகுந்த நல்ல பலன்களைத் தரும். சாலையோரம் இருப்பவர்களுக்கும் தானம் கொடுக்கும். பாவங்களில் இருந்து விடுபட்டு புண்ணிய பலன்கள் உண்டாகும். சஷ்டி திதியன்று முருகன் கோயிலுக்குச் சென்று ஆறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications