Rasi Palan This Week: துலாம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வன்மத்தால் வரும் ஆபத்து.. கவனம்
Thulam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Thulam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுபவிரய பாக்கியம் உண்டாகும். நம்பிக்கை ஏற்படும். மன அழுத்தம் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், நண்பர்கள், உறவினர்கள் என சந்தோஷமாக இருப்பீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
யோக பலன்கள்
ஏற்றத்திக்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொடர்ந்து இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செல்வாக்குகள் கூடும். நரசிம்மர் வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலங்கள், சந்தோஷங்கள், ஏற்றங்கள் ஏற்படும். உத்தியோக ரீதியாக யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
அனுகூலம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அனுகூலம், சந்தோஷம் ஏற்படும். பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களுடைய சிறிய பிரச்சனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைப்பது நல்லது. சுபகாரிய விஷயங்களை தள்ளிப்போடாமல் அடுத்தடுத்து முடித்துக் கொள்வது சந்தோஷமான சூழ்நிலையைப் பெற்றுத் தரும்.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்து விஷயங்கள், சிக்கல்கள் எல்லாம் தீரும். உறவுமுறையில் மனம் விட்டுப் பேசுவது நன்மைகளை அதிகரிக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கிரக நிலைகள் சரியில்லாமல் இருப்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஏஜென்ட், அரசியல்வாதிகள், வீடு கட்டுபவர்கள், வீடு வாங்குபவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
தொழில்
இண்டஸ்ட்ரியல் துறை, மெஷினரி துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். நிறைய பேருக்கு இருதயப் பிரச்சனை, முதுகுப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் இருப்பது நல்லது. சர்க்கரை இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. வன்மத்தினால் சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
உங்களை மாட்டி விடக் கூடிய நிலைமைகள் உள்ளனர். துலாம் ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பஞ்ச கிரக சேர்க்கை இருப்பதால் அடுத்த ஒரு மாதத்திற்கு நல்ல நிலைமைகள் இருக்காது என்பதால் கவனம் தேவை. சந்தோஷம் 65 சதவீதமும், பொருளாதாரம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும். நரசிங்கப் பெருமாள் வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications