என் புருஷன் குழந்தை மாதிரி...: டென்ஷனில் அமெரிக்கப் பெண்கள்
லண்டன்: உங்களுக்கு எது டென்ஷன் அதிகம் தருகிறது என்று அமெரிக்கப் பெண்களிடம் கேட்டால்.. என்னோட புருஷன்தாங்க என்பதுதான் அவர்களது பதிலாக இருக்கிறதாம்.
குழந்தைகளை விட இந்த புருஷன்மார்களை சமாளிப்பதுதான் பெரும் டென்ஷன் பிடித்த வேலை என்பது இப்பெண்களின் கவலையாக இருக்கிறதாம்.
சின்னக் குழந்தைகளைக் கூட எளிதில் சமாளித்து விட முடிகிறது. ஆனால் இந்த பெரிய குழந்தைங்க படுத்தும் பாடுதான், ரொம்பக் கஷ்டமப்பா என்று அலுத்துக் கொள்கிறார்கள் அமெரிக்கத் தாய்மார்கள்.

7000 தாய்மார்களிடம் சர்வே
டுடே மாம்ஸ் என்ற நிறுவனம் எடுத்த சர்வேயில்தான் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது. மொத்தம் 7000 தாய்மார்களிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்டு கருத்தைப் பெற்று வெளியிட்டுள்ளனர்.

46 சதவீதம் பேருக்கு புருஷனை சமாளிக்க முடியலை
இதில் கருத்து தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பெண்களுக்கு குழந்தைகளை விட கணவர்களை சமாளிப்பதே கஷ்டமான காரியம் என்று சொல்லியுள்ளனராம்.

ஒரு ஒத்தாசை கூட கிடையாது
பல பெண்கள் சொல்லும் பொதுவான புகார், தங்களுக்கு கணவர்கள் சின்னச் சின்ன உதவியைக் கூட செய்வதில்லை என்பதுதானாம். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வது கிடையாது என்பது இவர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
ஒரு படத்தில் நடிகை ஜெயந்தி பெற்ற பிள்ளையை சமாளிப்பதை பார்த்து அவரது கணவர் ஜெமினி கணேசன் ரசிப்பாரே.. அதேபோலத்தான் தாங்கள் படும் பாட்டை பார்த்து கணவர்களும் ரசிப்பதாக பல தாய்மார்கள் அலுத்துக் கொண்டனராம்.

அவரே குழந்தைதான்
பல பெண்கள், தங்களுக்கு கணவர்கள் இன்னொரு குழந்தை போலத்தான். அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று செல்லமாக கூறுகிறார்கள்.

எல்லாத்தையும் நாங்களேதான் செய்யனும்
மூன்றில் ஒரு பங்குப் பேர் வீட்டு வேலைகளை தாங்களே செய்வதாகவும், கணவர்கள் உதவுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

உதவி செய்யலாமே...
பல பெண்களுக்கு தாங்கள் தாயானதை விட அதிக டென்ஷன் தருவது, மனைவியாக இருப்பது என்று கூறியுள்ளனர். தங்களுக்கு கணவர்கள் உதவ வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.

எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருந்தா எப்படி...
ஒரு படத்தில் 7 வயது சிறுவனாக மாறி நடப்பார் 35 வயதான எஸ்.ஜே.சூர்யா. அதேபோல தங்களது கணவர்கள் குழந்தை போல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது கடுப்பாக வருகிறது என்று கூறுகிறார்கள் பல பெண்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications