கொஞ்சம் கூட கூசாமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் இதுதான் கதி!
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்போருக்கு இதுதான் கதி என்பதை சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நிரூபித்துள்ளது.
சென்னை: கொஞ்சம் கூட கூசாமல், மனசாட்சி இல்லாமல், அடுத்தவர் சொத்துக்களையும், மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்க நினைப்போருக்கு இதுதான் கதி.. இதுதான் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மூலம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் பாடமாகும்.
இது சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு மட்டும் கிடைத்த தண்டனை அல்ல. இவர்களையெல்லாம் ஆட விட்டு வேடிக்கை பார்த்த ஜெயலலிதாவுக்கும் கிடைத்த தண்டனைதான் இது.
ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றை மக்கள் ஒருவரது கையில் கொடுக்கிறார்கள் என்றால் அத்தனை நம்பிக்கை வைத்துத்தான் தருகிறார்கள். ஆனால் அதை தூக்கித் தூரப்போட்டு விட்டு தரையில் போட்டு மிதித்து விட்டு நம் இஷ்டத்திற்கு ஆடலாம் என்று நினைத்தால் இதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் பரசு என்பதை நீதிபதி குன்ஹாவும், இப்போது உச்சநீதிமன்றமும் நிரூபித்து விட்டனர்.

ஜெ.வுக்கும் சேர்துத்தான்
ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் குற்றவாளி என்று அழைக்கப்படுவதிலிருந்து தப்பியுள்ளார். ஆனால் அவரும் குற்றவாளிதான். அவருக்கும் சேர்த்துதான் இந்த தீர்ப்பு. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று தங்களது செயலுக்குரிய பலனை அடைந்து விட்டனர். பதவிக்காக துடித்து வந்த சசிகலாவுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடியாக வந்துள்ளது.

கூச்சமே இல்லாத அரசியல்வாதிகள்
இந்தத் தீர்ப்பு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது: கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை சட்டம் சும்மா விடாது என்பது நிரூபணமாகியுள்ளது. மக்கள் தங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆட்டம் போட்டால் சட்டம் நின்று தண்டிக்கும் என்பதையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது.

தப்பவே முடியாது
ஒரு இடத்தில் தப்பினாலும், நிரந்தரமாக தப்ப முடியாது என்பதையும் இது நிரூபித்துள்ளது. எங்காவதுதான் குன்ஹா இருப்பார் உண்மைதான். ஆனால் எல்லா இடத்திலும் குமாரசாமிகள் இருக்க மாட்டார்கள் என்ற எச்சரிக்கைப் பாடத்தையும் இந்தத் தீர்ப்பு தவறு செய்பவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

மக்களுக்கு நிம்மதி
சசிகலா வெல்லாம் நமக்கு முதல்வரா.. இதுதான் தமிழக மக்கள் கடந்த சில நாட்களாக துடித்து வந்த துடிப்பு. அத்தனை பெரிய மன உளைச்சலிலும் மக்கள் மூழ்கிப் போயிருந்தனர். இதற்கு தீர்வே கிடையாதா என்ற பெரும் மனச்சுமையில் மூழ்கியிருந்தனர். அதை துடைக்கும் வகையில் இந்தத் தீ்ரப்பு வந்துள்ளது.

ஓ.பி.எஸ்ஸுக்கும் எச்சரிக்கை
ஆட்சி அதிகாரத்தில் உள்ள அத்தனை பேரும் இந்தத் தீர்ப்பை நல்லதொரு பாடமாக எடுத்துக் கொண்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.. இதே ஜெயலலிதாவின் ஆட்சியில் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர் செல்வம் உள்பட.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications