Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாச கர்ப்பம்.. ஷில்பாவை பாத்தீங்களா.. கையில் லத்தியுடன்.. உச்சி வெயிலில்.. அப்ளாஸை அள்ளும் டிஎஸ்பி

கர்ப்பிணி பெண் டிஎஸ்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎஸ்பி ஷில்பாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. யார் இந்த ஷில்பா? என்ன காரணம்?

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.. நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. இதனால் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன.

எனினும் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உள்ளது.. இந்த தொற்று பரவல் தடுப்பு பணியில் எண்ணற்ற காவல்துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்ஸ்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பலரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

 மாஸ்க்

மாஸ்க்

இதில் மருத்துவ துறைக்கு அடுத்தபடியாக காவல்துறையினரின் பங்கும் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. யாரெல்லாம் கொரோனா விதிமுறைகளை மீறுகிறார்களோ, அவர்களுக்கு ஸ்பாட்டிலேயே ஃபைன் போடப்படுகிறது.. முக்கியமாக மாஸ்க் எல்லாரும் போடுகிறார்களா என்பதை கண்காணிப்பதே நாடு முழுவதும் டிராபிக் போலீசாருக்கு பெரும் வேலையாக இருந்து வருகிறது.

நடுரோடு

நடுரோடு

அப்படிப்பட்ட பணியைதான் ஷில்பா சாஹு செய்து வருகிறார்.. இவர் ஒரு டிஎஸ்பி.. 5 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. காலையில் டியூட்டிக்கு வந்ததும், கையில் ஒரு லத்தியுடன் வந்து நடுரோடில் நின்று விடுகிறார்.. டிராபிக்கை சரி செய்கிறார்.. அந்த பக்கம் வண்டிகளில் வருவோர்கள், மாஸ்க் போட்டிருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கிறார்.. அதுவும் சோஷியல் டிஸ்டன்சுடன் இந்த பணியை மேற்கொள்கிறார்.

விதிகள்

விதிகள்

தன்னுடைய முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளார்.. கடுமையான வெயில் அடிக்கிறது.. எதையும் பொருட்படுத்தாது, உசசி வெயிலில் நின்று கொண்டு, கொரொனா விதிகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்கிறார்... பிறகு அவர்களிடம் சென்று எங்கு செல்கிறார்கள் என்றும் விசாரித்து வைத்தும் கொள்கிறார்.

வீடியோ

5 மாசம் கர்ப்பம் என்றால், ஒரு பெண்ணுக்கு எத்தனையோ விதமான உடல் பிரச்சனைகள், இருக்கத்தான் செய்யும்.. எனினும் எதையும் பொருட்படுத்தாமல், மக்களின் நலனை காக்க இவர் மேற்கொள்ளும் ரிஸ்க் மக்களை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. தினசரி வாழ்வில் ஒரு காவல் அதிகாரி தங்கள் உயிரை பணயம் வைத்துள்ளனர் என்பதற்கு ஷில்பாவின் இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+