ஜெயலலிதாவின் லண்டன் சிகிச்சையை முறியடித்த சசிகலா- உடந்தையாக விஜயபாஸ்கர்-ஆறுமுகசாமி கமிஷன் 'ஷாக்'
சென்னை: ஜெயலலிதாவின் லண்டன் சிகிச்சை முயற்சிகளை சசிகலா முறியடித்தார்; சசிகலா, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒரு கருவியாக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் செயல்பட்டார் என ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டடு. இந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வருவதில் அவருக்கு சுகாதாரத் துறை செயலாளர் துணையாக இருந்தார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சுகாதாரத் துறைச் செயலாளர் எழுத்துப்பூர்வ அறிக்கை ஏதும் அளித்துள்ளார்களா என்று அவரிடம் கேட்ட போது, அந்தக் கேள்வி தனக்குப் பொருந்தாது என பதிலளித்தார்.

விஜயபாஸ்கரிடம் கேள்வி
மறைந்த முதல்வருக்கு எந்த வகையிலான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர், சசிகலா ஆகியோரிடம் கேட்டுத்தான் அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்பது தவறு. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஒருமனதாக முடிவெடுத்தார்களா என்ற கேள்விக்கு ஆம் என பதிலைத்தார் விஜயபாஸ்கர்.

வெளிநாட்டு சிகிச்சை
ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை அழைத்துச் சென்றிருக்க முடியுமா? டாக்டர் ரிச்சர்ட் பீலே அவருடன் செல்ல தயாராக இருக்கிறேன்; தமது லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என கூறினாரே என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், தம்பிதுரை ஆகியோரும் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தயாராக இருந்தனர். ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர். அதனால் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.

அப்பல்லோவுக்கு சர்ப்போட்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தேவையான முறையான முயற்சியை விஜயபாஸ்கர் எடுக்காதது வியக்கத்தக்கது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ஒரு தகுதி வாய்ந்த மருத்துவராக இருந்தும் நோயாளியின் மருத்துவ நிலை, மருத்துவ விதிமுறைகள் போன்றவற்றை புரியும் திறமை இருந்தும் தனது மனதையும் அறிவையும் அவர் பயன்படுத்தாது ஏன் என்பது ஆச்சரியமளிக்கிறது. அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்தனர் என ஆணித்தரமாக கூறினார் விஜயபாஸ்கர்.

முக்கியமான கருவி விஜயபாஸ்கர்
உறவினர்களற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இறுதிநாள் வரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாக திகழ்ந்தார் விஜயபாஸ்கர். அப்பல்லோ சிகிச்சையில் ஆஞ்சியோ செய்வதை தவிர்ப்பதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உறுதியாக செயல்பட்டனர். இவ்வாறு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications