Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஷியில் யோகி போட்ட லிஸ்ட்.. ஒன்றுவிடலையே.. மொத்தமும் சக்சஸ் செய்த உ.பி. பாஜக.. கவனிக்கும் கட்சிகள்

உத்தரப் பிரதேச அரசு தற்போது வரை ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான 'டபுள் என்ஜின்' அரசு செய்துள்ள சாதனைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பட்டியலிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனது பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று பாஜக தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறது. இதனை 'டபுள் என்ஜின்' ஆட்சி என்றும் அழைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தாக்கல் செய்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் 2023-2024ம் ஆண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவத்திற்கு இம்முறை அதிக நிதியும் ஒதுக்கப்பட்டது. மட்டுமல்லாது மாநிலத்தின் வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சியினர் மாநில அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அத்தனையும் நிறைவேற்றியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் மீதான் கண்ணோட்டம் தற்போது மாறியிருக்கிறது. மெட்ரோ ரெயில்கள் மற்றும் PMAY, சௌபாக்யா மற்றும் உஜ்வாலா திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு முயன்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

 டபுள் என்ஜின் அரசு

டபுள் என்ஜின் அரசு

உத்தரப் பிரதேசத்தில் மத்திய அரசு ஆட்சி செய்ய தொடங்கி 4.5 வருடங்கள் கடந்தவிட்ட நிலையில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கி 'விகாஸ் உத்சவ்' எனும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக துணைத் தலைவரும் உ.பி.யின் பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் மற்றும் உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "மாநில மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால்தான் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மாநில அரசு தனது இலக்குகளை அடைய பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பெரும் உதவி புரிந்தனர். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் மாநிலம் முழுவதும் ரவுடிகளையும், மாஃபியா டான்களையும் சுதந்திரமாக உலவ அனுமதித்தார்கள். ஆனால் தற்போது இது முற்றிலுமாக குறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் மீதான் கோபத்தை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம் அரசு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டிருக்கிறது. நாங்கள் எங்களுக்கு என சொந்தமாக வீடுகளை உருவாக்கிக்கொள்ளவில்லை.

வீடுகள்

வீடுகள்

ஆனால் 42 லட்சம் பேருக்கு இலவச வீடுகளை வழங்கியுள்ளோம். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களுக்கான மாளிகைகளை உருவாக்கிக்கொண்டிருந்தனர். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தளவில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது தடுக்கப்பட்டது. பலர் ரேஷன் அட்டைகளை முறைகேடாக வைத்திருந்தனர். இதானல் உரியவருக்கு ரேஷன் அட்டை இல்லாமல் போய்விட்டது. இதனையடுத்து 80, ரேஷன் கடைகளை நாங்கள் e-PoS இயந்திரங்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம் போலி கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

 வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 4.2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் இந்த வேலையை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த அச்சம் கிடையாது. இங்கு முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் ஏற்றுமதி, வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பாஜக ஆட்சியல் ஏற்பட்ட மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+