"ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை!" ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஏபிவிபி சாடல்
ஜேஎன்யூ தாக்குதல் விவகாரம் குறித்து ஏபிவிபி ட்விட்டரில் பரபர கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
மும்பையில் ஐஐடியில் படித்து வந்த 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி, கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சொலான்கியுடன் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்வலம்
இதற்கிடையே சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி டெல்லியில் இருக்கும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் நேற்று ஊர்வலம் சென்றனர். இந்த பேரணியில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் தலைவர்களின் படங்களுடன் மாணவர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் அங்குப் படிக்கும் தமிழ் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி ஷிவாஜியின் படம் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்
இந்த விவகாரத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கு வைக்கப்பட்ட தந்தை பெரியார் படமும் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

முதல்வர் கண்டனம்
மேலும், தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அதை மறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டரில், "பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல. ஆலோசனை நடத்தவும், விவாதம் நடத்தும் இடம் அவை. தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினரின் கோழைத்தனமான தாக்குதலையும் கண்டிக்கிறேன். பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தியதை நான் கண்டிக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை" என்று பதிவிட்டிருந்தார்.

ஏபிவிபி பதிலடி
இதற்கிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து ஏபிவிபி அமைப்பினர் கருத்து கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் ட்விட்டரில், "ஸ்டாலின் ஜேஎன்யுவில் நேற்றிரவு நடந்த சம்பவத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறார். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலை குறித்தும் அவருக்குத் தெரியவில்லை. நேற்றிரவு ஜேஎன்யுவில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் படம் மட்டும்தான் ஜேஎன்யு அர்பன் நக்சல்கள் மூலம் சேதப்படுத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளனர்.

ஜேஎன்யூ பதிவாளர்
முன்னதாக தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஜேஎன்யூ பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஜேஎன்யூ வளாகத்தில் தேசிய தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல். பன்முகத்தன்மை, நல்லுறவுக்கு எதிராக நடந்து கொள்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications