Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு கட்ட வந்த இடத்தில் கசமுசா.. கர்ப்பமான மீனாட்சி.. கைவிட்ட சூப்பர்வைசர்.. சாக்கடைக்கு போன சிசு!

விழுப்புரம் அருகே பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: வீடு கட்டும் இடத்தில் சித்தாள் மீனாட்சியுடன் சூபர்வைசருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. மீனாட்சி கர்ப்பம் என்று தெரிந்ததுமே.. இறுதியில் பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசி கொன்றே விட்டார் மீனாட்சி!

விழுப்புரம் பூந்தோட்டம் மாரியம்மன் கோவில் தெரு.. இரவு நேரம்.. 10 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தையை கையில் வைத்து கொண்டு ஒரு பெண் சுற்றி சுற்றி வந்தார்... சுற்றுமுற்றும் பார்த்தார்.. பிறகு திடீரென கையில் இருந்த குழந்தையை ஒரு சாக்கடையில் வீசியிட்டார்.. கோலியனூரான் வாய்க்கால் கழிவுநீர் கால்வாயில்தான் அந்த குழந்தையை வீசினார்.

mother arrested for her child death near villupuram

ரொம்ப நேரமாக சந்தேகத்துடனேயே பார்த்து கொண்டு நகர்ந்த பொதுமக்களுக்கு இந்த பெண்ணின் செயல் பகீர் என்று ஆகிவிட்டது.. அதனால் உடனடியாக விழுப்புரம் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் எந்த கேள்வி கேட்டாலும் அது ஒன்றிற்கும் ஒழுங்காகவே அந்த பெண் பதில் சொல்லவில்லை.. பிறகு திடீரென குழந்தையை வீசிய அதே சாக்கடையில் விழுந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து பதறிபோன போலீசாரும், பொதுமக்களும் இந்த பெண்ணையும் மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.. பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணையும் நடந்தது.

அவரது பெயர் மீனாட்சி.. கணவர் பெயர் விநாயகம்.. காதலித்து 10 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளார்.. காவிரிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள்.. 2 குழந்தை பிறந்து இறந்துவிட்ட நிலையில், விநாயகத்துடன் சண்டை போட்டு கொண்டு தனியே நுங்கம்பாக்கத்தில் தங்கி உள்ளார்.. கட்டிட வேலை பார்த்து வருகிறார்.. இப்போது மீனாட்சிக்கு 34 வயதாகிறது.. அப்போதுதான் பில்டிங் சூபர்வைசருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. ஒரே வீட்டில் தங்கி வந்துள்ளனர்.

மீனாட்சி கர்ப்பமானார்.. கர்ப்பம் என்று தெரிந்தவுடனேயே சூபர்வைஸர் எஸ்கேப் ஆகிவிட்டார்.. நிறைமாத கர்ப்பிணியான மீனாட்சிக்கு என்ன செய்வதென்று தெரியாமல், விழுப்புரம் மேல்மலையனூர் கோயிலுக்கு செல்லலாம் என்று பஸ் ஏறினார்..

திண்டிவனம் அருகே வந்த போது பிரசவ வலி வந்துவிடவும், பயணிகள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.. அங்குதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது.. ஆனால் குழந்தைக்கு மஞ்சள் காமாலையாம்.. டாக்டர்கள் அப்படி சொல்லவும், நோயாளி குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சாக்கடையில் வீசினாராம். இதையடுத்து மீனாட்சியை போலீசார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+