சிவப்பு கம்பளம் விரித்த அகிலேஷ்! இணைந்த பாஜக Ex அமைச்சர்கள், Ex Mla-க்கள்! யோகி கலக்கம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் அகிலேஷ்யாதவ் முன்னிலையில் இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அதிர்ச்சியையும், கலக்கத்தையும் அளித்திருப்பதாக தெரிகிறது.
பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பின்னடைவால் அக்கட்சியின் மேலிடம் மிகுந்த கவலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதவி ராஜினாமா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் எம்.எல்.ஏ.க்களாக இருந்த பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் ஷர்மா உள்ளிட்ட 7 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த விவகாரம் நாடு தழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி
இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்துவிட்டு அந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு இதுவரை எந்த நல்லதும் செய்யவில்லை என்பது யோகியின் ஆட்சி மீது இவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டாகும். இந்தச் சூழலில் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் ஷர்மா, ரோஷன் லால் வர்மா ஆகியோர் தங்களை சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

அகிலேஷ் முதல்வர்
அகிலேஷ்யாதவ் அவர்களை வரவேற்றதுடன் சமாஜ்வாதி கட்சி கொடி வண்ணமான சிவப்பு நிற தலைப்பாகையை அவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தார். இதனிடையே அந்த விழாவில் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் அகிலேஷ்யாதவ் தான் என்றும் 2024-ம் ஆண்டு அகிலேஷ் தான் பிரதமர் எனவும் தெரிவித்தார். இதர பிற்படுத்தப்பட்டோரின் நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டதாக சுவாமி பிரசாத் மவுரியா கூறினார்.

யோகி விருந்து
இதனிடையே லக்னோவில் இந்த இணைப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பட்டியிலனத்தவர் ஒருவர் வீட்டில் மகா சங்ராந்தி பண்டிகையை ஒட்டி விருந்து சாப்பிட்டு கவனம் ஈர்த்திருக்கிறார். கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ.பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ள 7 பேர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications